பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் H$99 நான் ஒன்றும் சொல்லவில்லை. சமூக அந்தஸ்து மதிப்பு செல்வம், செல்வாக்கு முதலியன பற்றி நான் கவலைப்படவுமில்லை. இவை எனக்கு வந்து சேரவேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. 31 1978 ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாதமி விருது புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலுக்காக எனக்கு வழங்கப்பட்டது. 1979 ஆம் வருட ஆரம்பத்தில், பரிசு அறிவிக்கப்பட்ட சமயம். நான் ராஜவல்லிபுரத்தில் தனியாக இருந்தேன். உடனே சென்னைக்கு வரும்படி என் அண்ணாவும் தி.க.சிவசங்கரனும் எனக்கு எழுதினார்கள். சென்னை வந்து சேர்ந்தேன். சாகித்ய அகாதமிப் பரிசு அறிவிக்கப்பட்டதும், ஒவ்வொரு வருடமும் எதிர்ப்புக்குரல்களும், குறைகூறல்களும், கடுமையான விமர்சனங்களும் பத்திரிகைகளில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் அந்த வருடம் அனைத்துப் பத்திரிகைகளும், தகுதியான நூலுக்குப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது என வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டின. சிற்றிதழ்களும் பெரிய பத்திரிகைகளும் எனக்கு வாழ்த்துக் கூறின. மாலை முரசு, கல்கி, துக்ளக், குமுதம் பத்திரிகைகள் விரிவாகப் பேட்டி கண்டு பிரசுரித்தன. 'குமுதம் அட்டையில் படம் வெளியிட்டு, பேட்டியைப் பிரசுரித்தது. பேட்டி கண்டவர் தொலைக்காட்சி நிலையச் செய்தி வாசிப்பாளர் திருமதி சோபனா ரவி. இலங்கை, டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை"யும் என் படத்தை அட்டையில் வெளியிட்டு, உள்ளே கலாநிதி சிவத்தம்பி எழுதிய கட்டுரையைப் பிரசுரித்து என்னைப் பெருமைப் படுத்தியது. நான் எதிர்பார்த்திராத விதத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் - தூரத்துச் சிற்றுர்களில் இருந்தும் கூட - வாசக அன்பர்கள் வாழ்த்துக் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். அவர்களுடைய அன்பையும் மகிழ்ச்சியையும் புலப்படுத்திய எண்ணற்ற கடிதங்கள் என்னைப் பிரமிக்கவைத்தன. பிப்ரவரி மாதம் பரிசளிப்பு விழா, ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரத்தில் நடைபெற்றது. பொதுவாக, சாகித்ய அகாதாமியின் விருதுகள் வழங்கும் விழா இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், நடுவில் சில வருடங்கள் ஒரு புது வழக்கம்