பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வாழ்க்கைச் சுவடுகள் ஒருவர். அவர் எழுத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தையல் தொழிலாளியாக உழைத்து கவுரவமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இலட்சியவாதி கர்ணன். விழாக்கள் நடத்திப் பாராட்டியது போதுமே என்று எண்ணவேண்டிய அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எனக்குப் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன. தமிழ் அன்பர்கள் என்மீது கொண்ட அன்பையும் நட்பு உணர்வையும் அவை வெளிப்படுத்தின. எனக்கு மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளித்தன. 32 சாகித்ய அகாதமி விருது கிடைத்ததனால் வாழ்க்கையில் பிரமாதமான மாறுதல் அல்லது வளர்ச்சி எதுவும் ஏற்பட வழி பிறந்துவிடவில்லை. அந்த ஒரு வருடம் முழுவதும் என் பெயருக்கு விளம்பர வெளிச்சம் மிகுதியாகக் கிடைத்ததுதான் கண்டபவன்' இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் எழுத்துக்களை புத்தகங்களாக வெளியிடப் பதிப்பகத்தார்கள் முன்வருவார்கள் கூடியவரை உங்கள் எழுத்துக்கள் பலவற்றையும் நூல்களாக்கிவிடுங்கள் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட அதிசயம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. - 'நீங்கள் தராதரம் பாராமல், சிறு பத்திரிகைகள் பலவற்றுக்கும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். கவுரவமான பெரிய பத்திரிகைகளுக்கு மட்டுமே எழுதுங்கள் என்று ஒரு நண்பர். எனக்கு நல்லது எண்ணிச் சொன்னார். சிறுபத்திரிகைகளில் எழுதிவந்ததன் மூலமே கவனிப்பையும் எண்ணற்ற அன்பர்களின் நட்பையும் நான் பெறமுடிந்துள்ளது. சிறுபத்திரிகைகளை நான் ஏன் ஒதுக்க வேண்டும்? என்று எண்ணினேன். உங்கள் எழுத்துலக வாழ்க்கையிலேயே இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் உங்களுக்கு ஒரு பெரும் தொகையாக ஐயாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு என்ன செய்ய எண்ணியிருக்கிறீர்கள்? இப்படியும் சிலர் என்னைக் கேட்டார்கள். - மதுராந்தகம் நகரில், இலக்கிய வீதி இனியவன் ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டத்திலும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. ஐயாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன பண்ணிவிடமுடியும்? 1940கள் 50களில் இது ஒரு பெரும்தொகையாக எனக்குப் பெரிதும் உதவியிருக்கும். என் எழுத்துக்களைப் புத்தகங்களாக வெளியிட