பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 233 எனக்குச் சில ஆயிரங்கள் வேண்டும் என்று நான் அக்காலத்தில் விரும்பினேன். அன்று இரண்டாயிரம் ரூபாய் எனக்குக் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்துள்ளதைக் கொண்டு ஒரே ஒரு புத்தகம்தான் வெளியிட முடியும். ஒரு புத்தகம் வெளியிடுவதால் தாக்குப் பிடிக்க முடியாது. தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தால்தான் உரிய பலன் கிட்டும். இப்போதுள்ள நிலைமையில் இந்த ஐயாயிரம் ரூபாய் ஒரு வருடச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும் என்று கூறினேன். அந்தக் கூட்டத்தில் என்னைப் பாராட்டிப் பேசிய நண்பர் சு. சமுத்திரம் சொன்னார் ஐயாயிரம் ரூபாய் ஒரு வருடச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். வல்லிக்கண்ணனாக இருக்கப்போய்தான் ஐயாயிரம் ஒரு வருடத்துச் செலவுக்குப் போதுமானதாகிறது. எனக்கு ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் அது ஓரிரு மாதத்துக்குக்கூடப் பற்றாது. இப்பவே என் மனைவி வீட்டிலே மேஜை இல்லை. நல்ல நாற்காலிகள் இல்லை என்று செல்லிக்கொண்டிருக்கிறாள். அதை யெல்லாம் வாங்கினால் ஐயாயிரம் ரூபாய் ஒரு வாரத்திலேயே தீர்ந்து டோகும். ஆகவே, ஐயாயிரம் என்பது உருப்படியாக ஏதாவது பண்ணுவதற்குப் போதுமான பெரும் தொகை இல்லை தான்' என்று. எனது பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்கு அவ்வப்போது உதவிகள் புரிந்தவர்களில் நண்பர் சு. சமுத்திரமும் ஒருவர் ஆவார். இக்காலகட்டத்தில் அவர், மத்திய அரசின் செய்தித் துறையில் திட்டம் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். திட்டம் இதழில் மதிப்புரை எழுதச் சொல்லித் தொடர்ந்து புத்தகங்களை அனுப்பிவைத்தும், சாதனைகள் புரிந்த எழுத்தாளர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும்படி கேட்டும். உரிய முறையில் சன்மானம் வந்து சேர உதவிக் கொண்டிருந்தார் அவர். இனியவன் நடத்திய இலக்கிய வீதி பற்றிச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னதாகச் சென்னையில் உள்ள இலக்கியச் சிந்தனை' என்ற அமைப்புப் பற்றிக் கூறவேண்டும். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நல்லமுறையில் இலக்கியப் பணி புரிந்து வருகிறது இலக்கியச் சிந்தனை. முதலில், சிறுகதை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அது அமைக்கப்பட்டது. இலக்கிய ஆர்வமும், எழுதுவதில் உற்சாகமும் கொண்ட ப, லட்சுமணன் 'இலக்கியச் சிந்தனையைத் தொடங்கினார். அவர் தம்பி ப. சிதம்பரம் அவருக்கு உற்ற துணையானார். பாரதி எனும் இலக்கிய நண்பரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். தமிழில் மாதம் தோறும், தரமான பத்திரிகைகளில் வருகிற சிறுகதைகளைப் பரிசீலனை செய்து சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்து,