பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2{}; வாழ்க்கைச் சுவடுகள் அதை எழுதியவருக்குப் பரிசு வழங்குவது. பின்னர், ஆண்டு முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளில் தலைசிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அதை எழுதியவருக்குக் கணிசமான ஒரு தொகையைப் பரிசாக அளிப்பது. அப் பன்னிரண்டு கதைகளையும் தொகுப்பாகத் தயாரிப்பது அதை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவின் போது வெளியிடுவது. இவை அந்த அமைப்பின் செயல்திட்டங்கள். ஒவ்வொரு மாதமும், அந்த அந்த மாதத்திய சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்யும் பொறுப்பு யாராவது ஒருவரிடம் ஒப்படைக்கப்பெறும் அந்த ரசிகர் தமது விருப்பம் போல், தனக்குப் பிடித்த ஒரு கதையை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதை என்று தேர்ந்தெடுப்பார் எந்தப் பத்திரிகையில் வந்த எந்தக் கதையையும் அவர் தம் இஷ்டம் போல் தேர்ந்து வரலாம். அவருடைய மதிப்பீட்டில் இலக்கியச் சிந்தனை குறுக்கிடாது அவர் தேர்வை அப்படியே ஏற்றுக் கொள்ளும். ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலையில் இலக்கியச் சிந்தனைக் கூட்டம் நடைபெறும் இலக்கியம் சம்பந்தமான ஒரு சிறப்புச் சொற்பொழிவை ஒருவர் நிகழ்த்துவார். அந்த மாதத்திய சிறுகதைத் தேர்வு குறித்துத் தேர்ந்தெடுத்தவர் கட்டுரை வாசித்துத் தம்முடிவைச் சொல்வார். அந்தக் கதைக்கு உரிய பரிசு வழங்கப்படும். அதே போல, பன்னிரண்டு கதைகளையும் படித்து வருடத்தின் சிறந்த சிறுகதையைத் தேர்ந்து சொல்லும் பொறுப்பு பெயர்பெற்ற எழுத்தாளர் ஒருவருக்குத் தரப்படும். அவரது விமர்சனக் கட்டுரை தொகுப்பில் சேர்க்கப்படும். இப்படி ஒரு நற்பணியை இலக்கியச் சிந்தனை விடாது செய்து கொண்டிருக்கிறது. அது ஆரம்பித்துச் சிறுகதை இலக்கியப் பணி செய்து வந்த காலத்திலேயே, நடுவில் புதிய திட்டம் ஒன்றையும் மேற்கொள்ள முனைந்தது. ஒவ்வொரு வருடமும், தமிழில் வெளிவருகிற புத்தகங்களில் சிறந்த ஒரு நூலுக்குப் பரிசு வழங்க முன்வந்தது. நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம், வாழ்க்கை வரலாறு போன்ற எந்த நூலாகவும் இருக்கலாம். தகுதி வாய்ந்தது என இலக்கியச் சிந்தனை அமைப்பாளர்கள் கருதுகிற ஒரு புத்தகத்துக்குப் பரிசு வழங்கப்படும். சில வருடங்களுக்குப் பிறகு, இலக்கியச் சிந்தனை மற்றுமொரு நற்பணியையும் மேற்கொண்டது. சாதனை படைத்த படைப்பாளிகள் அநேகர், அவர்களுடைய வாழ்நாளிலும் போதிய கவனிப்புப் பெறமுடிந்ததில்லை; அவர்கள் மரணம் அடைந்த பின்னரும் உரிய கவனிப்பைப் பெற்றதில்லை. பலர் அடியோடு மறக்கப்படுகிறார்கள். அத்தகைய படைப்பாளிகளின் வாழ்க்கையையும் படைப்புகளையும். அவற்றின் தன்மைகளையும் இலக்கிய