பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2むア தமிழ்நாட்டில் மட்டுமாவது போக முடிந்த ஊர்களுக்கெல்லாம் போக வேண்டும் என்று எண்ணினேன். திருநெல்வேலி மாவட்டத்திலேயே தோன்றி, அம் மாவட்டத்திலேயே ஓடி, அந்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கிற தாமிரவர்ணி ஆற்றையாவது முழுமையாக அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து புறப்பட்டு, அதன் கரை வழியாகவே பயணம் செய்து, அது கடலோடு சேரும் புன்னைக்காயல்வரை போய்ப் பார்க்க வேண்டும் என்று சொல்லி வந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்னச் சின்ன மலைகள் மீது ஏறிப் பார்க்கவும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் மீது ஏறவும் வாய்ப்புகள் கிட்டின. தாமிரவர்ணி ஆற்றை அதன் முழுநீளத்தையும் ஒரே முறையில் கண்டறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு இடங்களில் அந்த நதியைக் காணவும், அது புன்னைக்காயலில் கடலோடு சேரும் இடத்தில் நின்று பார்க்கவும் காலம் துணை புரிந்துள்ளது. இந்தியப் பெருநதிகள் பலவற்றையும் கல்கத்தா போய்வந்த பயணங்களின் போது, ஓடும் ரயில் வண்டியில் இருந்தபடியே கண்டுகளிக்கும் பேறு பெற்றேன். அத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் சிற்சில இடங்களுக்குப் போகவும், கடலோரம் நின்று மகிழவும் சந்தர்ப்பங்கள் உதவியுள்ளன. தமிழ்நாடு பூராவும் கற்றிப், பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் பார்ததுவிட்டேன் என்று சொல்ல முடியாது. காலமும் வாழ்க்கைநிலையும் துணைபுரிந்த வரை ஓரளவுக்கு ஊர்கள் சுற்றினேன். அவ்வளவுதான். நான் ஓர் இலக்கியச் சொற்பொழிவாளன் ஆகவோ, பட்டிமன்றப் பேச்சாளனாகவோ இருந்திருந்தால், ஊர்கள் சுற்றுவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் மிக அதிகம் கிட்டியிருக்கக்கூடும். சாகித்ய அகாதமியின் உதவியோடு சில புதிய இடங்களைக் காணமுடிந்தது. சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் நானும் ஒருவனாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். ஐந்து வருட காலத்துக்கு அந்தப் பொறுப்பு ஆண்டுக்கு ஒரு முறை ஆலோசனைக் குழு கூடும். அநேகமாக சென்னையில்தான் கூட்டம் நடைபெறும் சில சமயம் வேறு துரத்து நகரத்திலும் நடக்கும். ஆலோசனைக் குழு செய்து முடிப்பதற்கு அரும்பெரும் காரியங்கள் இரா. அகாதமி மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ள புத்தகங்கள், புதிதாக எழுதப்பட வேண்டிய நூல்கள், முன்பு ஒதுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வேலைகள் என்ன நிலையில் இருக்கின்றன. முன்பு மொழிபெயர்ப்பு வேலையை ஏற்றுக் கொண்டவரிடமிருந்து எழுத்துப் பிரதி வந்துவிட்டதா அனைத்து இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழில் யார் யாரைப்