பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱貂 வாழ்க்கைச சுவடுகள் அத்தன்மையில் தான் அச்சிற்றுர் உள்ளது. பல்கள் போய் வருகின்றன. நல்ல மளிகைக் கடையோ, பல பொருள் அங்காடியோ கிடையாது. வசதியான சிற்றுண்டிச் சாலையோ, சுத்தமான டிக் கடையோ கூட இல்லாத ஊர். சுமாரான நடுநிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. சரியாக இயங்கும் ஆஸ்பத்திரி இல்லை. ஊர்ப் பிள்ளைகள் இரண்டு மைலுக்கு அப்பால் உள்ள சங்கர்நகர் மேல்நிலைப் பள்ளிக்குப் போய்த் தான் படித்து வருகிறார்கள். 1950 களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள அருவன் குளம் என்கிற நாரணம்மாள்புரம் போய் அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தார்கள். அந்தப் பள்ளி ஏற்படுவதற்கு முந்திய காலத்தில் திருநெல்வேலிக்கும். பாளையங்கோட்டைக்கும் போய்ப் படிக்க வேண்டிய நிலை இருந்தது. சைவ வேளாளர்களில் கார்காத்தார் என்ற பிரிவைச் சேர்ந்த வேளாளர்கள் முன் காலத்தில் அவ்வூரில் வளமாக வாழ்ந்தார்கள். அந்தக் காலத்தில் பெரிது பெரிதாக அவர்கள் கட்டி வைத்த வீடுகள் ஊருக்குத் தனித் தோற்றமும் மதிப்பும் அளித்தவாறு நிற்கின்றன. பிந்தைய தலைமுறையினர் பூர்வீக வீடுகளுக்கு வருடம் தோறும் வெள்ளை அடிக்கக் கூட முடியாத நிலையில் வீடுகளை வைத்திருந்தார்கள். பிறகு பெரிய வீடுகளை, இதர சாதி மக்களுக்கு வந்த விலைக்கு விற்று விட்டுப் பிழைப்புத் தேடி வெளி ஊர்களுக்குப் போய்விட்டார்கள். அவ்வூரில் அந்தக் காலத்தில் வளமும், வசதிகளும் பெற்றிருந்த ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என் தந்தை ரா.மு. சுப்பிரமணியபிள்ளை. தாய் மகமாயி அம்மாள். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும். எங்கள் அப்பா அரசுப்பணியில் இருந்ததால், வெளி ஊர்களிலேயே வசிக்க நேரிட்டது. ராஜவல்லிபுரத்தில் வயல்களும், பெரிய விடும் இருந்தன. அவற்றைப் பெரியப்ப மேற்பார்த்து வந்தார். எங்கள் அப்பா கடலோரக் கிராமமான உவரியின் உப்பளங்களைக் கவனிக்க வேண்டிய 'சால்ட் சப் இன்ஸ்பெக்டராக திசையன்விளை ஊரில் வசித்தபோது நான் பிறந்தேன். அங்கிருந்து தூத்துக்குடிக்கு மாறுதல் இரண்டு. மூன்றாவது வயதில் ஒட்டப்பிடாரம் அதன் பிறகு கோவில்பட்டி வாசம். திசையன்விளை, தூத்துக்குடி காலம் பற்றி எல்லாம் அம்மா சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி காலம் முதல் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கோவில்பட்டியில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் எனக்குக் கல்விப் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது என் ஐந்தாவது வயதில். அப்போதெல்லாம் வித்யா ஆரம்பம் ஒரு விழாபோல் செய்து வைக்கப்படும்.