பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}{} வாழ்க்கைச் சுவடுகள் செய்யப்பட்டிருந்தன. மகாநாட்டுடன், நகரையும் மூன்று நாட்கள் நன்கு சுற்றிப் பார்க்க முடிந்தது. இரண்டாவது முறையாக நான் பெங்களுர் போக நேரிட்டதும் ஓர் இலக்கியக் கருத்தரங்கிற்காகத்தான். எக்குமினிக்கல் ஸென்ட்டர்' எனும் கிறிஸ்தவ நிறுவனம் ஒயிட் ஃபீல்ட் என்ற இடத்தில் கருத்தரங்கு கூட்டியது. பலவகைக் கருத்தரங்குகள் நடத்துவதும் அந்த அமைப்புகளின் முக்கியப் பணிகளில் ஒன்று ஆகும். அந்த இலக்கியக் கருத்தரங்கில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளின் எழுத்தாளர்கள் பங்கு பற்றிப் பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சேர்ந்த டேவிட் பாக்கியமுத்து. ஜி. நாகராஜன். பூரீவேணுகோபாலன் (புஷ்டா தங்கதுரை), நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நான் சென்றிருந்தோம் கருத்தரங்கு நிகழ்வுகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் பேசப்பட்டன. நகரை விட்டு விலகித் தனித்த ஓர் இடத்தில் இருந்தது ஒயிட்ஃபீல்ட் அங்குள்ள எக்குமினிக்கல் சென்ட்டர் வளாகம் மிகப் பெரியது. கட்டிடங்களும் பெரிது பெரிதாகச் சகல வசதிகளோடும் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்கள் மனோகரமாகக் கழிவதற்குக் கருத்தரங்கம் துணை புரிந்தது. திருவனந்தபுரத்துக்கு நான் பலமுறை போயிருக்கிறேன். முதல்முறையாகப் போனது, கிராம ஊழியன் இதழில் நான் பணிபுரிந்த காலகட்டத்தில். 1945இல், நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகசபை அங்கே முகாமிட்டிருந்தபோது, அவர்களது நாடகங்களைப் பார்ப்பதற்காக நவாப் என்னைத் திருவனந்தபுரத்துக்கு அழைத்தார். அப்போது சில தினங்கள் தங்கினேன். இரண்டாவது முறையும் கிராம ஊழியன் காலத்தில்தான். 1946இல் நண்பர் எஸ். சிதம்பரம் அழைப்பை ஏற்று, அவருடைய அதிதியாகப் போனேன். அப்போதுதான் 'கவிக்குயில் மலர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தோம். மலர் நல்லமுறையில் தயாராகி வெளிவந்தது. மூன்றாவது முறையாக நான் திருவனந்தபுரம் போனது முக்கியமான ஒரு பயணம் ஆகும். அச் சந்தர்ப்பத்தில் திக சிவசங்கரன், 'தீபம்’ இதழுக்காக முக்கியமானவர்களைப் பேட்டி கண்டு வந்தார். டி.எஸ். சொக்கலிங்கம், 'மணிக்கொடி கு. சீனிவாசன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதினார். அந்த வரிசையில் சுந்தர ராமசாமியையும் பேட்டி காணத் திட்டமிட்டார். அதற்காக, சென்னையிலிருந்து தி.க.சி. நாகர்கோவில் சென்றார். என்னையும் அவர் உடன் அழைத்துப்போனார். நாங்கள் சுந்தரராமசாமி வீட்டிலேயே தங்கினோம். எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியும் உடன் இருந்தார். இருவரும் பிரியமாகப் பேசிப்