பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2麓ア முறையில் பணியாற்றுகிறார்கள். தேவைப்படுகிற தகுதியானவர்களுக்குத் தையல் இயந்திரம் வழங்குதல், கைத்தொழில் பயிற்சி அளித்தல், வைத்தியமுறைகளைக் கற்றுக்கொடுத்தல், அதற்கு வசதியாக மூலிகைகளைப் பயிரிடுதல் போன்ற நல்ல காரியங்களை நகர்ப்புறங்களில் செய்து வரும் அமைப்புகளில் சோலை ட்ரஸ்ட் (SOLAITRUST) என்பதும் ஒன்று ஆகும் கிறிஸ்தியான்பேட்டை (CHRISTANPET) என்ற சிற்றுரில் அமைந்து, பல்லாண்டுகளாக நற்பணி புரிந்து கொண்டிருக்கிறது சோலை அறக்கட்டளை.' அதை அமைத்து இயக்கி, பாராட்டப்படவேண்டியமுறையில், திட்டங்களிட்டுச் செயல்புரிகிறவர் முனைவர் ஆர்.டிராஜன் எனும் இலட்சியவாதி. செயலாற்றல் மிகுந்தவர். ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று. பொருளாதார ரீதியிலான வளர்ச்சிகளை ஆய்வு செய்து அனுபவம் பெற்றவர் அவர் சிறிது காலம், சோலை அறக்கட்டளை சார்பில் 'பாரதி சோலை' என்றொரு சிற்றிதழை ஆர்டி ராஜன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். அது தரமான மாத இதழாக வெளிவந்துகொண்டிருந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. 1985 கடைசியில், ஒருநாள் ஆர்.டி.ராஜன் என்னைத் தேடி வந்தார். அப்போது நாங்கள் ராயப்பேட்டை, பாரதி சாலையில் ஒரு பெரிய வீட்டின் பின்புறம் ஒதுக்கமாக இருந்த தனிவீட்டில் குடியிருந்தோம். ராமசாமி மேஸ்திரி தெருவில் குடியிருந்த மாடிப்பகுதியை 1967இல் காலி செய்து விட்டு இந்த வீட்டுக்கு வந்திருந்தோம். அந்தப் பெரிய வீடு வரலாற்றுப் பெருமை பெற்றிருந்த 'காந்தி பீக்மேன்ஷன் என்று பெயர் பெற்ற மூன்று மாடிக்கட்டிடம் என்ஜினியர் அய்யாசாமிக்குச் சொந்தமானது. அவரது சந்ததியினர் அதில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனிப் பெயர் இடப்பட்டிருந்தது. ஸ்வாமீஸ் ஸ்மிட்' 'காந்தி பீக் என்ற தன்மையில். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்திருந்த போது அந்த மாளிகைக்கும் வருகைதந்தாராம். ராஜாஜி அங்கே வந்திருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரசிலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்த சமயம், சென்னை வந்தவர் இந்த வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்தாராம். இவற்றை அவ்வீட்டுக்காரர்கள் பெருமையாகச் சொல்வார்கள். பாரதி சாலை எனப் பெயர் மாற்றம் பெற்றுவிட்ட பைகிராப்ட்ஸ் ரோடில் எடுப்பாக நிற்பது இந்தப் பெரிய கட்டிடம் பெரிய இரும்பு கேட்டைத் திறந்தால், வரிசையாக இரண்டு மூன்று கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றின் ஓரமாகக் கிடைக்கிற குறுகலான வழியில் நடந்து உள்ளே போனால் பசுமாடு கட்டப்பெற்ற தொழுவம் இருக்கும். அதைக்கடந்து புகுந்தால், சிறிய 'அவுட் ஹவுஸ் ஆகத் தனி வீடு அமைதியாக இருக்கும். அந்த வீட்டில் நாங்கள் பதினெட்டு வருடங்கள் வசித்தோம்.