பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2蟹2 முயற்சிகளைத் தூண்டவும், அப்படி எழுதுகிறவர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் எழுத்தாளர் உறவு’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் மாவட்டம்தோறும் அதற்குக் கிளைகள் அமைக்கவேண்டும்; சமூக உணர்வு கொண்ட எழுத்து முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய சிறுபத்திரிகைகள் வளர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டு வந்தார் ஆர்டிராஜன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எழுத்தாளர் உறவு' அமைக்கப்பட்டது. நான் அதன் தலைவராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டனர். நான் மறுத்தும், என் மறுப்புரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முடிவில் நான் அவர்கள் வேண்டுகோளுக்கு இனங்க வேண்டியதாயிற்று. செயலாளர்-ஆர்.டி.ராஜன், பொருளாளர்-குன்றம் மு. இராமரத்னம் என்றும் தேர்வு செய்யப்பட்டது. இதர பொறுப்புகளுக்கும், மாவட்டச் செயற்குழுக்களுக்குமான பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். உறுப்பினர் கட்டணம் முதலியன பேசி முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் மனநிறைவுடன் பிரிந்து சென்றார்கள். இந்தக் கூட்டம் மதுரை நகரின் முக்கியப் பகுதியில் ஒரு பெரிய ரஸ்தாவிலிருந்து விலகிச் சிறிது தூரம் நடந்து சேர வேண்டிய பகுதியில் உள்ள 'ஐடியாஸ் நிலையம் வளாகக் கட்டிடத்தில் நடைபெற்றது. வாழைத்தோப்பு என்கிற, பிற்படுத்தப்பட்டோர் வசிக்கிற வட்டாரம் அது டீக்கடை ஒட்டல் எதுவும் அருகில் கிடையாது. டி சாப்பிடுவதற்கு சிறிது தொலைவு நடந்து முக்கிய ரஸ்தாவுக்குத்தான் வரவேண்டும். அந்த வட்டாரத்தில் 'ஐடியாஸ் நிலையம்' எனும் கிறிஸ்தவ அமைப்பு வசதியான முறையில் கட்டிடங்கள் கட்டி, ஆண்டு முழுவதும் கருத்தரங்குகள், சமூக மேம்பாட்டுக்கான கூட்டங்கள் முதலியன நடத்துவதற்கு வகை செய்து உதவியது. பிற்படுத்தப்பட்ட-பின்தங்கிய மக்களின் நலனுக்காகவும் சமூகத்தொண்டுகள் புரிந்துவந்தது. எழுத்தாளர் உறவு கூட்டத்துக்கு வந்தவர்கள் தங்குவதற்கு வசதியாக இருந்தது அந்த இடம். செயலாளர் ஆர்.டிராஜன் சோலை நிறுவனத்தை வளர்ப்பதற்காகப் பல இடங்களிலும் சுற்றி அலைந்து அனுபவப்பட்டிருந்ததால், அத்தகைய அமைப்புகளோடு அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர் சுற்றுப்பயணங்கள் மூலமும், கடிதத் தொடர்புகள் வாயிலாகவும் நிறுவன வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வந்தார். பணச் செலவுக்குச் சோலை ட்ரஸ்ட் உதவியது. - இத்தகைய அமைப்புகளில் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றவராக விளங்குவது செயலாளர்தாம். தலைவர் சும்மா பெயருக்குத்தான்.