பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 22盟 சோலை ட்ரஸ்ட் நிறுவனரும் செயலாளருமான ஆர்டி. ராஜன் ஒரு திட்டத்தின்படி, குறிப்பிட்ட ஏதோ நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே செயலாற்றி வந்தார், எழுத்தாளர் உறவு அமைப்பை இயக்கினார் என்று எண்ணவேண்டியிருந்தது. ஒரு குறித்த காலம் வரை அவர் தாராளமாகப் பணஉதவி செய்து உறவுக் கூட்டங்களை வெவ்வேறு ஊர்களில் கூட்டி அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகள் தயாரித்து வெளியிட்டுக்கொண்டிருந்தார். சோலை ட்ரஸ்ட் எங்கிருந்தோ நிதி உதவி பெறுவதற்கு, அந்த இயக்கம் எழுத்தாளர்களை இலட்சிய மார்க்கத்தில் வழிநடத்திச் செல்கிறது என்று காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்குமோ என்னவோ! எனவே, இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் ஆர்.டி. ராஜன், செயலாளர் பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார். எழுத்தாளர் உறவு தனித்து இயங்க வேண்டும் அதற்கெனத் தனியாகத் திறமையுள்ள ஒருவரை செயலாளராகத் தேர்ந்துகொண்டு செயல்பட வேண்டும் இனி அது வேலை ட்ரஸ்ட் அமைப்பைச் சார்ந்து இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார். பணபலம் இல்லாமல் எந்த இயக்கம்தான் வளர முடியும்? ஒரே இடத்தில் கூட்டங்கள் நடத்த வேண்டுமானால்கூடப் போதுமான பணம் வேண்டுமே! தேவைப்படுகிற செலவுகளுக்குக்கூடப் பணம் பெற்றிராத-உறுப்பினர்கள் மூலம் கட்டணத் தொகை வசூலிக்க முடியாத-அமைப்பு எப்படி சரிவர இயங்குதல் கூடும்? அதனால் எழுத்தாளர் உறவு சோர்வுற்றது. பொருளாளரான குன்றம் இராமரத்னம் சோர்ந்து பின்வாங்கத் தயாராகஇல்லை, எழுத்தாளர் உறவு என்று ஆரம்பித்துவிட்டோம், இரண்டு வருடங்கள் நடத்தியுமாயிற்று மேலும் தொடர்ந்து நடத்த முயல்வோம் என்று உறுதியாகச் சொன்னார். கோயம்புத்தூரில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். கோவை நகரப் பேராசிரியர் - பெயர் பெற்றிருந்த எழுத்தாளர் ஒருவரைச் செயலாளராகத் தேர்வு செய்தார், உற்சாகமூட்டும் சொற்பொழிவுகள், வழிகாட்டும் அறிக்கைகள் எல்லாம் நிகழ்த்தப்பட்டன, புதிய செயல் வேகம் பெறக்கூடும் என்றொரு தோற்றம் அந்தக் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்டது. ஆனாலும், கால ஓட்டத்தில் எழுத்தாளர் உறவு அமைப்பு செயல்வேகமும் உற்சாக முனைப்டம் பெற்றுவிடவில்லை புதிய செயலாளர், தலைவர் பதவி வகிப்பது போலவே நடந்து கொண்டார், அறிக்கைகள் அனுப்புவது கடிதங்கள் எழுதுவது பத்திரிகைகளில் தன் பெயர் வரும்படி கவனித்துக் கொள்வது என்ற நிலையில்தான் செயல்பட்டார், பொருளாளர் அவ்வப்போது செயலாளரை ஊக்குவித்து ஏதாவது செய்யத் தூண்டிக் கொண்டிருந்தார், எழுத்தாளர் உறவு இயக்கரீதியில்