பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝笼2 வாழ்க்கைச் சுவடுகள் செயலாற்ற வேண்டுமானால், தலைவரும் செயலாளரும் ஊர்ஊராகச் சென்று. மாவட்டக் கிளைகளுடன் தொடர்பு கொண்டு கூட்டங்கள் கூட்டி, சொற்பொழிவுகள் நிகழ்த்தி வழிகாட்ட வேண்டியது அவசியம் என்று பொருளாளர் கருதினார். எனது கருத்தைக் கேட்டார். நல்ல திட்டம்தான், நான் சுற்றுலா வரத் தயார் என்று தெரிவித்தேன். பொறுப்புகளும் பணிகளும் மிகுதியாகப் பெற்றிருந்த செயலாளர் ஊர்ஊராகச் சென்று, கொள்கைப் பரப்பு அலுவலில் ஈடுபட இசையவில்லை, தலைவரும் பொருளாளரும் சுற்றுப்பயணம் போய் ஆவன செய்யலாம் என்று பொருளாளர் தீர்மானித்தார். செலவுக்குப் பணம் மிகுதியாகத் தேவைப்படுமே? என்ன செய்யலாம்? சோலை ட்ரஸ்ட் உதவியை நாடுவது என்று பொருளாளர் நினைத்தார், வேலூர் - காட்டாடி சென்று. சோலை அறக்கட்டளைப் பொதுச் செயலாளர் ஆர், டி, ராஜனைச் சந்தித்துப் பேசினார், ஆனாலும் பலன் ஏற்படவில்லை. திட்டம் நல்ல திட்டம் தான். ஓர் இயக்கத்தை இப்படித்தான் வளர்க்க வேண்டும். அதற்குத் தேவைப்படுகிற பணத்தையும் நீங்களேதான் தேடிக்கொள்ள வேண்டும், சந்தாடாக்கி வசூலித்தல், உறுப்பினர்களிடமே நிதி கேட்டுப் பெறல், வேறு தகுந்தவர்களிடமிருந்து நிதி பெறுதல் என்று திரட்ட வேண்டும். எங்கள் ட்ரஸ்ட் பொருள் உதவி செய்ய இயலாது. ட்ரஸ்டின் விதிமுறைகள் அதற்கு இடம் கொடாது என்று ராஜன் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆகவே எழுத்தாளர் உறவு செயலற்று ஒடுங்கியது. இப்படி ஓர் அமைப்பை- நசிவு இலக்கியத்தைக் கண்டிப்பது, நச்சு எழுத்துக்களை வளர்த்துப் பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கும் வணிகநோக்குப் பத்திரிகைக்களின் போக்கை எதிர்ப்பது எழுத்தாளர்களையும் மக்களையும் இத்தகைய நாசகாரசக்திகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு பெறச் செய்வது, ஆரோக்கியமான நல்ல எழுத்துக்கள் தோன்றிப் பரவத் துணைபுரிவது முதலிய நோக்கங்களுடன் செயலாற்றக் கூடிய எழுத்தாளர் அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று நண்பர் ஆர். டி. ராஜன் தீவிரமாக இருந்த ஆரம்பகட்டத்தில், அவரிடம் நான் கேட்டேன். இதே நோக்கங்களோடும், நல்ல செயல் திட்டங்களோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பயனுள்ள பணிகள் செய்து கொண்டிருக்கிறதே. நாடு தழுவிய இயக்கமாக அது வளர்ந்திருக்கிறது. இப்போது அதே மாதிரியான இன்னோர் அமைப்பு எதற்காக? அந்த எழுத்தாளர் சங்கம் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து வளர்கிறது. கம்யூனிசச் சார்புடையதாக இருக்கிறது. அப்படி இல்லாமல், சுயேச்சையாக