பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 223 இயங்கும் எழுத்தாளர்களுக்கான ஓர் அமைப்பு தேவை. எந்த அரசியல் கட்சியையும் சாராது தனித்து இயங்க வேண்டும் எழுத்தாளர் உறவு என்று நண்பர் கூறினார். கலை, கலாச்சார, சமூக இலக்கிய உணர்வோடு எழுத்தாளர் உறவு வளரவேண்டும்; சமூக உயர்வுக்கும் மனித மேம்பாட்டுக்காகவும் இலக்கியங்கள் மூலம் அது வழி காட்டவேண்டும். அப்படி எழுதக் கூடிய எழுத்தாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும், புதிய எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் இலட்சியம் பேசினார் அவர், ஆயினும், அப்படி ஓர் அமைப்பைத் தோற்றுவித்த பிறகு அதை அவர் அந்தரங்கத்தில் விட்டு விட்டார். இந்த முயற்சிக்கு என்னையும் இழுத்திருக்க வேண்டாமே என்ற எண்ணம் எனக்கு ஏற்படத்தான் செய்தது, பொருளாளர் பொறுப்பு வகித்த குன்றம் மு. இராமரத்னம் நல்ல செயல் முனைப்பு உள்ளவர், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற அறிவியலாளர், கோயம்புத்துர் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணையில் சுகர்கேன் இன்ஸ்டிடியூட்) சயன்டிஸ்ட் ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். எழுத்தார்வம் பெற்று, 1940 முதலே கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிவந்தவர். அவ்வப்போது சில பத்திரிகைகளும் நடத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தாராமதி' என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தார், எழுத்தாளர்களுக்கும் சிற்றிதழாளர்களுக்கும் வழிகாட்டி அவர்களது வளர்ச்சிக்குத் துணை புரியவேண்டும் என்ற நோக்கம் உடையவர். எழுத்தாளர் உறவு அமைப்பு, தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே. தமிழ்ச் சிற்றிதழாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர் வளர்த்து வந்தார். எனவே அவர் சிற்றிதழாளர் மாநாடு ஒன்றைச் சிவகாசியில் கூட்டினார், 1987இல் தமிழ் நாட்டின் பலபகுதிகளிருந்தும் சிற்றிதழாளர்கள் சிவகாசி மாநாட்டுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கி. ராஜநாராயணன், நான் மற்றும் சிலர் சிறப்புரை ஆற்றினோம். குன்றம் இராமரத்னம் தலைமை தாங்கினார், சிற்றிதழ்களின் கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. அதைப் பொள்ளாச்சி நசன் ஏற்பாடு செய்திருந்தார். பொள்ளாச்சியைச் சேர்ந்த நடேசன், தன் பெயரைப் பொள்ளாச்சி நசன் என்று சுருக்கிக் கொண்டுள்ளார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் நசன் முதலில் விடுதலைப் பறவை என்றொரு சிற்றிதழ் நடத்தினார். அதுமுதல் சிற்றிதழ்களைச் சேகரித்துப் பாதுகாப்பதில் நாட்டம் கொண்டார். விடுதலைப் பறவை நின்று விட்டது. நசன் ஆய்வு ரீதில் சிற்றிதழ்களில் கவனம் செலுத்தலானார். அதற்காகச் சிற்றிதழ்ச் செய்தி என்ற ஆய்வு இதழைப் பல வருடங்கள் நடத்தினார்.