பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 225 வருகிறார். ஆண்டு தோறும், வெவ்வேறு ஊர்களில் தமிழ்நாடு சிற்றிதழாளர்கள் சங்கம் ஆண்டுவிழா சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. உரிய முறையில் மூன்று இதழ்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து இராமரத்னமே சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சீரிய முறையில் தொண்டாற்றிவருகிறார். குன்றம் இராமரத்னம் தரமான பத்திரிகையாகத் தாராமதி இதழை நடத்தினார். நீண்ட காலம் நடந்த அச்சிற்றிதழ் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அவர் தொடர்ந்து முங்காரி' என்ற இதழை நடத்துகிறார். "எழுத்தாளர் உறவு அமைப்பை உயிர்ப்பிக்க குன்றம் இராமரத்னம் எவ்வளவோ முயன்றும் பயனில்லாது போயிற்று. 1989இல் கோயம்புத்தூரில் அவரது முயற்சியால் உறவுக் கூட்டம் நடைபெற்றது. புதிதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பின்னர் எழுந்து வளர்ந்த கருத்து வேற்றுமைகளினால் எழுத்தாளர் உறவு பாதிக்கப்பட்டது. அந்த அமைப்பு செயலற்றுப் போனது. 36 செல்வர்கள் மிக அதிகமாகவே இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்குமே கொடுக்கும் மனம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பணம் படைத்த பலர் மேலும் மேலும் பணத்தைப் பெருக்குவதிலேயே நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். பணத்தை லாபம் தரக்கூடிய பலவழிகளில் ஈடுபடுத்தி, பேங்க் சேமிப்பை அதிகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களே அதிகம் காணப்படுகிறார்கள். அனேகர் 'ஆன்மீகலாபம் தேடும் எண்ணத்தோடு சாமியார்களுக்கும் கோயில்களுக்கும் வாரி வழங்குகிறார்கள். அவர்கள் தேவைப்படுகிற ஏழை எளியவர்களுக்கோ, சமுதாய நலப் பணிகளுக்கோ தாராளமாகப் பணம் வழங்க மனம் கொள்வதில்லை. சில பணக்காரர்கள் ஆண்டவன் எங்களுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறார். நாங்கள் அவற்றில் சிறிதளவு நுள்ளி நுள்ளி நற்பணிகளுக்குத் தருகிறோம் என்று கணக்குப் பார்த்து ஓரளவு பொதுப்பணிகளுக்கு வழங்க முன்வருகிறார்கள். கொடுப்பவர்களிலும் பலர் தங்களுக்கு எவ்வளவு புகழ்வெளிச்சம் கிட்டும் என்று எதிர்பார்த்து, விளம்பரமோகத்துடனயே செலவு பண்ணுகிறார்கள்.