பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 227 தபால் துறையில் பணிபுரிகிறவர். அவர் ஈ.எஸ். தேவசிகாமணியைத் தோழராய், தலைவராய், நல்லாசிரியனாய். நற்றுணையாய் ஏற்று வாழ்பவர் ஈ.எஸ்.டியும் தபால் துறையில் பெரும் பொறுப்புகள் ஏற்றுப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுக் கோவையில் வசித்துவருகிறார். அவரது பணிக் காலத்தில் தபால் துறையில் உள்ள பலருக்கும் பலவகைகளில் உதவிபுரிந்து வந்திருக்கிறார். இப்போதும், கொடுப்பது தெரியாமல் பலருக்கும் ஈத்துவக்கும் பண்பாளாராக வாழ்கிறார். ஈ.எஸ். தேவசிகாமணியை நான் முதல் முறையாக, சிவகாசியில்தான் சந்திக்க நேர்ந்தது. ஈ.எஸ்.டி. ஓர் எழுத்தாளரும் கூட. ஆனால் அவர் ஆங்கிலத்தில்தான் எழுதியுள்ளார். 1930கள் 40களில் சென்னையிலிருந்து 'மை மேகசின் என்ற ஆங்கிலப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஈ.எஸ்டி சுவாரசியமான கதைகள் பல எழுதியிருக்கிறார். அக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து UNEXPECTED GUEST என்ற புத்தகமாக உருவாக்கினார் ஞானன். ஈ.எஸ்டிக்குத் தமது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு கவுரவப் பணியாக ஞானன் அதைச் செய்தார். r அத்துடன் ஈ.எஸ்.டி.யைச் சிறப்பித்துப் பெருமைப்படுத்தும் முறையில் அந்தப் புத்தக வெளியீட்டைச் சிவகாசியில் விழா நடத்தி நிறைவேற்றினார் ஞானன். அந்த விழா ஒரு திருமண வைபவம் போல் நடந்தது. 1990இல் அவ்விழாவில்தான் நான் ஈ.எஸ்.டி.யை நேரில் கண்டேன். அவ்விழா தனி வரலாற்றுச் சிறப்பு உடையதாகவும் ஆயிற்று, விழாவில் ஏற்புரை நிகழ்த்திய ஈ.எஸ்.டி. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்தார். ஆண்டு தோறும், அந்த வருடத்தில் வெளிவரும் சிறுகதை நூல்களைப் பரிசீலித்துத் தகுந்த நூல்களைத் தேர்வு செய்து, அவற்றின் ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்க முன்வந்தார் ஈ.எஸ்.டி. மறைந்த அவரது மனைவியின் பெயரால் அமைக்கப்படும் பரிசுத்திட்டம் அது. லில்லி தேவசிகாமணி நினைவுச் சிறுகதை இலக்கியப் பரிசுத்திட்டம் என்று அது பெயரிடப்பட்டது. 1990இல் வெளிவந்த சிறுகதைப் புத்தகங்கள் விலைக்கு வங்கப்பட்டுப் பரிசீலிக்கப்பெற்றன. வ.க, தி.க.சி., ராஜம்கிருஷ்ணன், ஞானன், ஈ.எஸ்.டி. நடுவர்களாக இருந்து பரிசுகளுக்கு உரிய நூல்களைத் தேர்வு செய்தார்கள். முதலாவது பரிசளிப்பு விழா 1991இல் கோயம்புத்தூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் மாநாடு போலவே அது சிறப்பாக அமைந்திருந்தது. அதிலிருந்து பரிசளிப்பு ஆண்டுதோறும் நிகழ்கிறது. அந்த அந்த வருடம் வெளிவரும் சிறுகதைப் புத்தகங்களை அனுப்பிவைக்கும்படி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படி வருகிற புத்தகங்களுக்கு