பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வாழ்க்கைச் சுவடுகள் உரிய விலையை ஈ.எஸ்.டி அனுப்பிவிடுவார். வக, தி.க.சி., ராஜம் கிருஷ்ணன் மூவரும்தான் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். சில வருடங்கள் கோவையில் பரிசளிப்பு விழா ஒரு நாள் முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தக வெளியீடு இலக்கியச் சொற்பொழிவுகள், பரிசளிப்பு எல்லாம் நடைபெறும். ஈ.எஸ்.டி.க்கு முதுமையும் நோய்களும் பாதிப்பு உண்டாக்கியதால், நாள் முழுவதும் இருந்து விழாவைக் கவனிக்க முடியாத நிலைமை வந்தது. எனவே, பரிசளிப்பு, மாலை நேர நிகழ்ச்சியாக்கப்பட்டது. பின்னர் செயலாளர் ஞானனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் விழாவுக்கான முன்னேற்பாடுகளைக் கவனித்து. விழாவைக் குறையின்றி நடத்த இயலவில்லை. எனவே பரிசுகள் உண்டு, விழா கிடையாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை நூல்களுக்கான பரிசுகள் உரிய ஆசிரியர்களுக்குப் பேங்க் டிராப்ட்' ஆக அனுப்பிவைக்கப்பட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஞானன் முயற்சியிலும் உழைப்பிலும் சில உயரிய நூல்கள் வெளிவருவதற்கும் ஈ.எஸ்.டி துணைபுரிந்திருக்கிறார். மூத்த எழுத்தாளர்கள் பலபேருடைய சிறுகதைகள் தொகுக்கப்பட்டுத் தலை வாழை என்ற நூலாக வெளியிடப்பட்டது. வாழ்வும் இலக்கியமும் பற்றிச் சில முக்கிய எழுத்தாளர்களிடம் கட்டுரைகள் பெற்று, அவை நூலாகத் தொகுக்கப்பட்டுப் பிரசுரமானது. தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ஒரு பெரிய புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது. நந்தவனத் தென்றல் என்பது அதன் பெயர். ஈ.எஸ்.டியின் வாழ்க்கை வரலாற்றை 'அனிச்சை இதயம்' என்ற பெயரில் ஞானன் எழுதி, அதுவும் ஒரு வருடம் வெளியிடப்பட்டது. பின்னர். இத்திட்டத்தின் அரும்பெரும் முயற்சியாக தத்துவ தரிசனங்கள் என்ற நூல் பிரசுரம் பெற்றது. இந்தியத் தத்துவங்களை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இது - வள்ளல் மனம் பெற்ற ஈ.எஸ். தேவசிகாமணி 2001 பிப்ரவரி இறுதியில் இறந்துபோனார். இலக்கிய உலகத்திற்கு இது ஒரு பேரிழப்பேயாகும். 37 கிறிஸ்தவ அமைப்புகளும் கிறிஸ்தவ அறிஞர்களும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் கணிசமான பங்காற்றியிருக்கிறார்கள். இப்போதும் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் குறிப்பிடத்தகுந்த விதத்தில் தமிழ்ப்பணி 4/ந்துள்ளது.