பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 24] தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். சம்பந்தன், சி. வைத்தியலிங்கம் ஆண்டு மலருக்கு எழுதியதோடு சரி. இலங்கையர்கோன் ஆண்டு மலருக்குப் பின்னரும் தொடர்ந்து. கடைசி வரை கிராம ஊழியன் இதழுக்கு ஆதரவு காட்டி வந்தார். எனவே, இலங்கையர்கோன் கதைத்தொகுப்பை வெளியிடும் விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று அங்குள்ள இலக்கிய நண்பர்கள் விரும்பினார்கள். என்னை அழைத்தார்கள். நான் வரஇயலாது என்று தெரிவித்துவிட்டேன். கிராம ஊழியன் காலத்திலேயே இலங்கை இலக்கிய வட்டாரத்தினரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியதாக வல்லிக்கண்ணன் பெயர் அமைந்துவிட்டது. பின்னர் சரஸ்வதி காலத்தில் அது அதிக மதிப்புக்கும் கவனிப்புக்கும் உரியதாயிற்று. தாமரை அதற்கு மேலும் வலுசேர்த்தது. வல்லிக்கண்ணன் பெயருக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் அங்கீகாரத்தையும்விட அதிகமான மதிப்பும் அங்கீகரிப்பும் இலங்கையில் இருக்கிறது. நீங்கள் ஒரு தடவை இங்கு வந்தால் அதை நன்கு உணர்வீர்கள். இங்குள்ள ரசிகர்கள் உங்களைக் காண வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் கட்டாயம் இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை நண்பர்கள். சரஸ்வதி காலத்துக்குப் பிறகு, அடிக்கடி என்னை அழைத்துக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா இவ்விஷயத்தில் முனைப்பாக இருந்தார். ஒருமுறை, இலக்கியவாதிகளின் நண்பரும் தொழிலதிபருமான ரங்கநாதன் மூலம் ஏற்பாடுகள் செய்தார். போக வர விமானப் பயணத்துக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து ஒரு நண்பர்மூலம் சொல்லி அனுப்பினார். அவசியம் நான் இலங்கைக்கு வந்துபோக வேண்டும் என்று. பின்னர், 1979இல் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்றதும் என் படத்தை 'மல்லிகை அட்டையில் வெளியிட்டு, கலாநிதி கா. சிவத்தம்பி என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் பிரசுரித்த டொமினிக் ஜீவா, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நீங்கள் இலங்கை வரவேண்டும் என்று விரும்பி அழைத்தார். அப்போதும் நான் இலங்கை செல்ல மனம் கொள்ளவில்லை. பாஸ்போர்ட், விசா எல்லாம் வாங்குவது தொல்லையான-சிரமங்கள் நிறைந்த காரியமாகும் என்ற நினைப்பே முக்கிய காரணம் ஆகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது காரணம் கூறிப் பயணத்தைத் தட்டிக் கழித்து வந்த நான் 1996இல் இலங்கை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது நாற்பதாம் ஆண்டு நிறைவை 1996 ஜூலை மாதம் முதல் வாரத்தில் கொண்டாடியது. அதை