பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 243 இரண்டு, மூன்றாவது நாட்களில் இலக்கிய ஆய்வு அரங்குகள். 1950 முதல் 1980 வரை, மற்றும் 1980க்குப் பின் என இரு காலகட்டங்களாகப் பகுத்துக்கொண்டு ஈழத்துச் சிறுகதைகள், ஈழத்து நாவல்கள், கவிதைகள் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. தமிழக நாவல், சிறுகதை, கவிதை, பத்திரிகைகள், சிற்றிதழ்கள், இலக்கியப் போக்குகள், எதிர்கால இலக்கியம் பற்றி நாங்கள் சிறப்புரை ஆற்றினோம். இலங்கை அமைச்சின் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்தான் எங்கள் மூவரின் இலங்கைப் பயணத்துக்கு உதவியிருந்தது. ஆகவே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியப் பேரரங்க நிகழ்ச்சிகள் முடிவுற்ற பின்னர், கொழும்பு நகரின் வெவ்வேறு இடங்களில், கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அநேக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் விரிவுரை மண்டபத்தில் இலக்கியச் சந்திப்பு-கலந்துரையாடல் விவேகானந்த சபை மண்டபத்தில் இலக்கியச் சொற்பொழிவு முதலிய பல நிகழ்ச்சிகள், கண்டி மாத்தளை, அட்டன் ஆகிய இடங்களில் சிறப்பு நிகழ்வுகள், கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சின் தமிழ் இலக்கியக் குழு, வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் திருகோணமலையில் நடத்திய பிரதேச தமிழ் இலக்கிய விழா விலும் கலந்துகொண்டு உரையாற்றினோம். சில பள்ளிகளிலும் மாணவர் மாணவிகளுக்காக விசேஷ உரை நிகழ்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மலையக கலை இலக்கியப் பேரவையின் பதினைந்தாவது ஆண்டு விழா கண்டி சேனநாயகா நூலக மண்டபத்தில் பெரிதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் கலந்து கொண்டோம். இந்நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயக்கொடியும் கலந்துகொண்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனும் அமைப்புச் செயலாளர் என். சோமகாந்தனும் இலங்கை வானொலி நிலையம் டெலிவிஷன் மற்றும் முக்கிய பத்திரிகை அலுவலகங்களுக்கெல்லாம் எங்களை அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தனர், வானொலி, தொலைக்காட்சியில் பேச்சு, பேட்டிகள் பதிவு செய்யப்பட்டன. இலங்கையில் நாங்கள் பதினான்கு நாட்கள் தங்கி, இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம். அவற்றை எல்லாம் நாளிதழ்களும், வானொலியும், தொலைக்காட்சியும் பிரபலப்படுத்தி, எங்களுக்கு நிறைய