பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 念忒7 கிடைப்பது அரிது. மனிதர்கள் நாகரிகம் தெரியவராத குகைக்கால மக்கள் GLTಳು நாளோட்ட நேர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் கொடுமைகளில் எல்லாம் மிகப் பெரும் கொடுமை இது மிகுந்த மனவேதனை தரும் வாழ்க்கை நிலைமை. இலங்கையின் உயர் நாகரிகத்தை, கலாச்சாரத்தைக் காட்டுவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத் தமிழரின் மேலான வாழ்க்கை, அவர்களது பண்பாடு, அறிவுநிலை முதலிய பலவும் இலங்கைக்கே பெருமை தரக்கூடியதாகும். இப்படி யாழ்ப்பாணத் தமிழர்கள் கூறுவது வழக்கம். அத்தகைய மாண்புகள் பெற்றிருந்த தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய், தங்க இடமற்றவர்களாய் தவிக்க நேரிட்டிருப்பதும், அகதிகள் என்ற பெயரில் புலம் பெயர்ந்து நாடற்றவர்களாய் உலகெங்கம் பரவி, பிழைப்பு நடத்துவதும் மனிதகுல வரலாற்றில் படிந்த கறைகளாகும். மனிதர்கள் யுத்தங்களற்று, அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழக் கற்றுக் கொள்ளவில்லை இன்னும் என்பதை இலங்கையில் - யாழ்ப்பாணத்தின் நிகழ்வுகளும் உலகில் பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஆக்கிரமிப்புகள்- தாக்குதல்கள்-அழிவுவேலைகள் முதலியனவும் அறிவுறுத்துகின்றன. 1960களில் அல்லது 1970களில் நான் இலங்கைக்குப் போயிருந்தால் அந்நாட்டின் வளங்களையும் வனப்புகளையும்-பார்க்கவேண்டிய இயற்கைச் செல்வங்களையும் கலைச் செல்வங்களையும் கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றிருக்கக்கூடும் 1996இல் அங்கே போகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியதால், நானும் இலங்கை போயிருக்கிறேன் என்று மட்டுமே கூறிக் கொள்ள முடிகிறது. ஆனாலும், நான் இலங்கை போனதும் வந்ததும், அங்கே தங்கிய நாட்களின் அனுபவங்களும் மனோகரமானவை என்பதில் சந்தேகமில்லை. 46 தங்கள் வகித்த ராயப்பேட்டை, பாரதிதானை கந்தி பீக் மேன்ஷனின் உள்ளடங்கிய சிறுவிட்டைக் காவி செய்ய வேண்டிய கட்டாயம் 1988இல் ஏற்பட்டது. அந்த விட்டின் நாங்கள் பதினெட்டு வருடங்கள் வசித்தோம். வீட்டுக்காரர்கள் தங்களுக்கு வீடு தேவைப்படுகிறது என்ற சொல்வி எங்களை வேறு இடம் பாத்துப்போகும்படி கேட்டுக் கொண்டார்கள் திருவல்லிக்கேணி வட்டாரத்தில் எங்களுக்கு வசதியான ஓர் இடத்தை என் அண்ணாவும் நானும் நண்பர்களும் தேடலானோம். புரோக்கர் உதவியையும் நாடினோம். தகுந்த வீடு கிடைப்பது சிரமமானதாகவே இருந்தது.