பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 285 44 ன்ை வாழ்க்கையின் நான் பெற்றுள்ள தற்பேறுகள் பலவற்றுள்ளும் முதன்மையானது எண்ணற்ற இனிய நண்பர்களை அடைத்திருப்பதே ஆகும். அதேச நண்பர்களைப் பற்றி வரலாற்றின் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறேன். . அப்படிக் குறிப்பிடப்படாத சில நண்பர்கள் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். சிலர் அறிமுகமாகி மிக நெருக்கமாகப் பழகுகிறார்கள். அடிக்கடி கடிதங்கள் எழுதியும் அவ்வப்போது நேரில் வந்து பேசி மகிழ்ந்தும் நட்பை வளர்க்கிறார்கள். திடீரென்று ஏனோ தொடர்புகொள்ளாமலே போகிறார்கள். கடிதங்கள் எழுதினாலும் பதில் எழுதுவதுமில்லை. இதற்கு அவர்களுடைய குடும்பப் பிரச்சினைகள், பல்வேறு நெருக்கடிகள், மனக்குழப்பங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். இத்தகைய நண்பர்களைப் பற்றி எண்ணுகிறபோது எனக்கு முதலில் நினைவில் எழுகிறவர் மு. நாகரத்தினம்தான். இவரைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அடுத்து. நத்தம் லிங்கன். இவர் நல்ல கதைகள் எழுதக் கூடிய திறமையாளர். ஒரு காலத்தில் தாமரை'யில் சிறப்பான கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகு அவர் கதை எழுதுவதையே விட்டுவிட்டார். தாமரையில் லிங்கன் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மாதத்தில் இலக்கியச் சிந்தனைக்காக அவருடைய கதையை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக நான் தேர்வு செய்திருந்தேன். அது முதல் அவர் என்னோடு கடிதத்தொடர்புகொண்டார். அன்புடன் அவருடைய ஊருக்கு வரும்படி அழைத்தார். நான் நத்தம் சென்று அவர் வீட்டில் சில நாட்கள் தங்கினேன். அவர் பெயர் மகாலிங்கம். கிராம நல அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நாடகத்திலும் அவர் ஆர்வம் காட்டினார். திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராமத்தில் பேராசிரியர் ராமானுஜம் நடத்திய முதலாவது நாடகப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களில் லிங்கனும் ஒருவர். ஆனால், பயிற்சி பெற்றதற்குப் பின்னர் நாடகம் எழுதுவதிலோ நடிப்பதிலோ அவர் அக்கறை காட்டவில்லை. சிறுகதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார். ஆங்கிலத்தின் மூலம் உலக இலக்கியங்களைக் கற்றறிவதிலும் அவர் சிரத்தை கொண்டிருந்தார்.