பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 வாழ்க்கைச் சுவடுகள் அவருடைய பாசமும் பிரியமும் நிறைந்த அழைப்புகளை ஏற்று நான் மூன்று நான்கு முறைகள் அவர் விருந்தாளியாகச் சென்று அவர் வீட்டில் தங்கியிருக்கிறேன். திடீரென்று அவர் தொடர்புகளை அறுத்துக்கொண்டார். அப்புறம் கதைகள் எழுதுவதையும் விட்டுவிட்டார். நற்பண்புகள் கொண்ட நல்ல மனிதர் அவர். அதே மாதிரிதான் வேலூர் ந.க. துறைவன் என்ற நண்பரும் நடந்துகொண்டார். மின்வாரியத்தில் பணிபுரியும் அவர் கவிதைகள் எழுதுபவர். அன்புடன் அவராகத் தேடிவந்தார். பல தடவைகள் வந்திருக்கிறார். உற்சாகமாகக் கடிதங்கள் எழுதுவார். சில வருடங்கள் என் பிறந்தநாளின்போது வந்து அன்பளிப்புகள் வழங்கினார். தொடர்பு கொண்டது போலவே அவராகவே ஒரு நாள் நட்புறவை நிறுத்திக் கொண்டார். எழுதிய கடிதங்களுக்குப் பதிலும் எழுதுவதில்லை. எனினும், சிற்றிதழ்களில் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதை அவர் நிறுத்திவிடவில்லை. தொடர்பு கொண்டு நீண்ட காலமாக நட்பை வளர்த்து வருகிறவர்களில் திண்டுக்கல் மா. கமலவேலன் முக்கியமானவர். பள்ளி ஆசிரியர். நல்ல முறையில் சிறுகதைகள், வாழ்க்கை வரலாறுகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் திறமையாளர். இவருடைய சிறுகதைகள் பலதொகுதிகளாக, மணிவாசகர் பதிப்பகம் வெளியீடுகளாகப் பிரசுரம் பெற்றிருக்கின்றன. ரேடியோ நாடகங்கள் பல எழுதி, அவை ஒலிபரப்பாகிப் பாராட்டுகள் பெற்றுள்ளன. குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் வாழ்க்கை வரலாறும் மற்றும் சில வரலாற்று நூல்களும் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு வரும்போதெல்லாம் இவர் இங்கு வீட்டுக்கு வந்து பிரியமுடன் பேசிச் செல்வது வழக்கம். நான் ராஜவல்லிபுரத்தில் இருந்த நாட்களிலும், திருநெல்வேலியில் தங்கும்போதும் என்னைக் கண்டு பேசி மகிழ்வதற்காகவே கமலவேலன் திண்டுக்கல்லில் இருந்து வந்து செல்வது உண்டு. நானும் திண்டுக்கல் சென்று அவரது விருந்தாளியாகப் பல முறைகள் தங்கியிருக்கிறேன். எனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தவறாது வாழ்த்துத் தந்தி அனுப்பிக் கொண்டிருக்கிற பண்பாளர் இவர். எழுத்தாளர் கமலாலயன் திறமையான சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியிருப்பவர். முற்போக்குச் சிந்தனை உடைய செயல்வீரர். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர். சங்க விசேஷ நிகழ்ச்சிகள் எந்த ஊரில் நடைபெற்றாலும், தவறாமல் போய் கலந்து கொள்ளும் ஆர்வலர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் அநேக வருடங்கள் வேலூரில் தொழில் துறையில் ஈடுபட்டிருந்தார். பிறகு அறிவியக்கப் பணிகளில் முனைந்து அந்த இயக்கத்துக்காக உழைக்கலானார். தற்போது சென்னையில் பணிபுரிகிறார். நல்ல நண்பா,