பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 269 தஞ்சைப்ரகாஷ் திறமையான எழுத்தாளர். இலக்கியவாதிகளின் நண்பர். நல்ல கதைசொல்லி. பரந்த அனுபவஞானம் உடையவர். தரமான எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் ரசிகர். கள்ளம், கரமுண்டார்வூடு எனும் இரண்டு நாவல்களின் ஆசிரியர். அண்மைக் காலத்தில் மரணமடைந்தார். சோலை சுந்தரபெருமாள் தஞ்சாவூர், அம்மையப்பன் என்ற ஊரைச்சேர்ந்த இனிய நண்பர். பல நாவல்கள், சிறுகதைகள் படைத்தவர். வெண்மணி சம்பவத்தை வைத்து செந்நெல் என்ற குறிப்பிடத் தகுந்த நாவலை எழுதியிருக்கிறார். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துத் தஞ்சைச் சிறுகதைகள் என்ற பெரிய தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். தஞ்சாவூரிலிருந்து சுந்தரசுகன் எனும் இலக்கிய மாத இதழை வெளியிடும் சுகன் - க.இ. சரவணன் மற்றொரு இனிய நண்பர். பல ஆண்டுகளாக, பெரும் இழப்பையும் கடுமையான உழைப்பையும் பெரிதுபடுத்தாது அயராது, சோர்வுறாது. பத்திரிகையைத் தரமாகக் கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டும் இளைஞர். இவரது குடும்பம் முழுவதுமே ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகன் இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது போற்றுதலுக்கு உரியது. கவிதை, கதை, சூடான சிந்தனைக் குறிப்புகள் எழுதும் ஆற்றல் பெற்ற உற்சாகி இவர். பா. அமிழ்தன் தீபம் இதழில் கவிதைகள், கதைகள் எழுதிக் கவனிப்புப் பெற்றவர். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளம் ஊரைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகள் குவெய்த்தில் தங்கிப் பணிபுரிந்தார். பம்பாயில் சில வருடங்கள் தொழில் செய்தார். பின்னர் சென்னைக்கு வந்து இங்கேயே வேலை பார்க்கிறார். படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் ஆங்கில நூல்களை அலுப்பின்றிச் சுவைத்து மகிழ்கிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் புத்தகங்களாகப் பிரசுரம் பெற்றிருக்கின்றன. தற்போது ஒரு நாவல் எழுதுவதில் முனைந்திருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ நண்பர்கள். 45 தமிழ்நாட்டில் காலங்காலமாக நீடித்து வருகிற சூழ்நிலையும் மக்களின் இயல்புகளும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு உற்சாகம் தருவனவாக இல்லை என்றே சொல்ல வேண்டுக் திறமையும் உழைப்பும் இங்கே போதிய கவனிட்டையும் உரிய மதிப்பையும் பெறுவதில்லை. சிலர் அபூர்வமாகக் கவனிப்புப் பெற்றாலும்கூடக் கால ஓட்டத்தில் சீக்கிரமே மறந்துவிடப்படுகிறார்கள்