பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ア2 வாழ்க்கைச் சுவடுகள் இவற்றை அடையக்கூடிய திறமையும் சாமர்த்தியங்களும் இல்லாதவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருப்பர். பெயர்பெற்ற படைப்பாளிகளின் பெயர்களே திரும்பத் திரும்ப முழக்கமிடப் பெறுகின்றன. எழுதுகிறவர்களும் அவர்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் என்று சில பெயர்களே பெருமளவில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இவர்களைத் தவிர இதர கவிஞர்கள் கவனிப்புக்கு உரியவர்களாகவே கருதப்படுவதில்லை. இது ஒரு குறையேயாகும். தனிவழியில் தமிழ்ப்பணி புரிந்துகொண்டிருக்கும் கவிஞர்களில் பெருங்கவிக்கோ எனும் சிறப்புப் பெயர் கொண்டுள்ள வா.மு.சேதுராமன் கவிதை நூல்கள் பலவற்றையும் படித்து, அவர் படைப்புகள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுத நேர்ந்தது. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் என்ற அந்த நூல் 1995இல் பிரசுரம் பெற்றது. சர்ச்சைக்கு உரிய - விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிற சில புத்தகங்கள் கவனிப்புப் பெறாமலே போகிறநிலைமையும் நீடிக்கிறது. தமிழகத்தில் தொ. மு.சி. ரகுநாதன் இளங்கோ அடிகள் யார்?' என்றொரு ஆய்வுநூல் எழுதினார். பெரிய புத்தகம். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரமன்னன் தம்பி என்றே கூறப்படுகிறது. அண்ணன் அரசாள வேண்டும் என்பதற்காக அவர் துறவு மேற்கொண்டார் என்றும் இருக்கிறது. இது தவறான கருத்து சிலப்பதிகாரம் பாடியவர் சேரநாட்டைச் சேர்ந்தவரோ, ஓர் இளவரசனோ இல்லை; அவர் சோழநாட்டைச் சேர்ந்த வணிகச் செட்டியார்தான் என்று ரகுநாதன் மிகுந்த ஆதாரங்கள் காட்டி அந்த நூலை ஆக்கியிருக்கிறார். சிலப்பதிகாரக் காவியத்தின் சிறப்புகளைப் பேசியும் எழுதியும் வந்த அறிஞர்களது கருத்துக்களை மறுத்து, ரகுநாதன் தமது முடிவை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார் அந்த ஆய்வு நூலில், அது எத்தகைய கவனிப்பைப் பெற்றிருக்கவேண்டுமோ - எவ்விதமான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்க வேண்டுமோ அப்படி எதையும் அந்த நூல் எதிர்கொள்ளவேயில்லை. அறிஞர்களும் ஆய்வாளர்களும் அந்த நூலைக் கண்டு கொள்ளவேயில்லை. சில பத்திரிகைகளில் இரண்டு மூன்று விமர்சனங்கள் வந்தனவே தவிர, ரகுநாதனின் ஆய்வுகளை வெட்டியோ ஒட்டியோ எவரும் எழுத முன்வரவில்லை. திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதுபோல அந்தப் பெரிய ஆராய்ச்சி ஒதுக்கப்பட்டதாகவே எண்ண வேண்டியிருந்தது. அதேபோல, ரகுநாதன் அண்மைக் காலத்தில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான புதுமைப்பித்தன் சிறுகதைகள் - விமர்சனங்களும்