பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 277 தயானந்தன் பிரான்சிஸ் இரண்டு நூல்கள் வெளியிட முன்வந்தார். 'அருமையான துணை' என்ற சிறுகதைத் தொகுப்பையும், மன்னிக்கத் தெரியாதவர் எனும் குறுநாவல் தொகுதியையும் கிறிஸ்தவ இலக்கியச் சங்க வெளியீடுகளாக டாக்டர் தயா கொண்டு வந்தார். மு. பரமசிவம் எழுதிய எனது வாழ்க்கை வரலாற்றையும் எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்' என்ற பெயரில் 1991இல் சி.எல்.எஸ். வெளியீடாக டாக்டர் தயா பிரசுரித்தார். நெய்வேலி இராமலிங்கம், மீனாட்சிப்பேட்டை குறிஞ்சி வேலன் ஆகியோரது முயற்சியால் குறிஞ்சிப்பாடி மணியன் பதிப்பகம் என் சிறுகதைகள் சிலவற்றை வல்லிக்கண்ணன் கதைகள்' என்ற பெயரில் பிரசுரித்தது. இதே பெயரில் சென்னை கயிலைப் பதிப்பகம் 1954இல் ஒரு கதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளது. அதில் வஞ்சம் முதலிய பன்னிரண்டு கதைகள் இடம் பெற்றிருந்தன. மணியன் பதிப்பகம் தயாரித்த தொகுப்பில் வேறு இருபது சிறுகதைகள் உள்ளன. - இப்போது 2000இல் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியும் அவர் மகன் நந்தனும் வல்லிக்கண்ணன் கதைகள்' என்ற பெயரில் 41 சிறுகதைகள் கொண்ட ஒரு பெரிய தொகுப்பை ராஜராஜன் பதிப்பகம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பிரசுரம் பெற்றுள்ள எனது சிறுகதைகளின் தொகுப்புகள் எதிலும் இடம் பெற்றிராத கதைகளைக் கொண்ட தொகுதி இது. என்னிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருக்கும் நண்பர் வே.சுப்பையா 'மனிதர்கள் சிறுகதைத் தொகுப்பை 1991லும் சுதந்திரப் பறவைகள் என்ற தொகுப்பை 1994லும் பூங்கொடிப் பிரசுர வெளியீடுகளாகப் பதிப்பித்தார். 2000 ஆண்டின் இறுதியில், தோழி நல்ல தோழிதான் என்ற சிறுகதைத் தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இவை தவிர, ஏற்கெனவே நான் தமிழாக்கிக் கொடுத்திருந்த 'ஆர்மேனியன் சிறுகதைகள்' எனும் தொகுப்பைப் புதுடில்லி நேஷனல் புக் ட்ரஸ்ட் இக் காலகட்டத்தில் தான் வெளியிட்டது. பதின்மூன்று இந்திய மொழிச் சிறுகதைகள் கொண்ட சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் புத்தகமும் இப்போது தான் வெளிவந்தது. 1999இல் 'தீபம் யுகம் என்ற நூல் பிரசுரமாயிற்று. 'தீபம்’ நா பார்த்தசாரதியிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டுள்ள அநா.பாலகிருஷ்ணன், ஞானியார்அடிகள் மன்றம் வெளியீடாக, தீபம் வரலாற்று நூலான இதை உருவாக்கியுள்ளார். ஆகவே, மனநிறைவு தரக்கூடிய விதத்தில், நான் எழுதிய புத்தகங்கள் பிரசுரம் பெற்றவாறு உள்ளன.