பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 22分 எழுத்தாளன் வாழ்க்கையில் ஒருபோதும் எனக்கு வெறுப்போ விரக்தியோ ஏற்பட்டதில்லை. ஏற்படவும் செய்யாது. எழுத்தாளனாகவே வாழ்வது என்பது நானாகவே தேர்ந்து கொண்ட வாழ்க்கை முறை. அது எனக்கு ஏன் விரக்தி உண்டாக்க வேண்டும்? எழுத்தாள வாழ்க்கை எனக்கு ஓர் ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிகமான சந்தோஷங்களையே பெற்றுத் தந்திருக்கிறது. எனக்குப் போதிய கவனிப்புக் கிடைக்கவில்லையே, என் எழுத்துக்கள் உரிய அங்கீகரிப்பைப் பெறவில்லையே என்று நான் வருத்தப்படுவதுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. அதே போல, அரசுப் பணியை விட்டுவிட்டதற்காக அப்புறம் நான் வருத்தப்பட்டதுமில்லை. அரசு அலுவலில் ஒரு எழுத்தராகவே இருந்து, காலாகாலத்தில் உரிய சிறு பணிஉயர்வுகள் பெற்று. திட்டமான மாத வருமானமும். பின்னர் ஒய்வு பெற்று ஒய்வு ஊதியமும் ஏற்று வாழ்க்கை நடத்துவது நிம்மதியானதாகப் பலருக்குத் தோன்றலாம். எனக்கு அது பிடிக்கவில்லை; விட்டுவிட்டேன். எழுத்தராகவே நான் வாழ்ந்திருந்தால், எழுத்தாளனாக வளர்ந்து ஊர்சுற்றிப் பெற்ற அனுபவங்களையும், அடைந்துள்ள எண்ணற்ற நண்பர்களையும் நான் பெற்றிருந்திருக்க முடியாது. அது எனக்குப் பெரும் இழப்பாகவே அமைந்திருக்கும். அடடா, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே என்று நான் எப்போதாவது எண்ணி வருத்தப்பட்டதுமில்லை. மாறாக, திருமணம் செய்து கொள்ளாமலும் பொறுப்புகளையும் சுமைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளாமலும் இருந்ததற்காக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததற்கு எனக்குப் பெண்மீதுள்ள பயமே காரணமாகும், பெண்ணோடு சேர்ந்து வாழ்வதில் உள்ளுற எனக்கு ஒரு பயமிருப்பதும் காரணம் என்றும் சிலர் சொன்னது உண்டு. பயம் என்பதைவிடப் பெண்மீதுள்ள வெறுப்பே காரணம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பெண்ணோடு சேர்ந்து வாழ்வதில் எப்போதும் சந்தோஷமும் நிம்மதியுமிருக்கும் என்று மனித வாழ்க்கை நிரூபிக்கவில்லை. குறைகூறல், சண்டை சச்சரவு, அமைதியைக் குலைத்தல், ஆசைகளையும் தேவைகளையும் வளர்த்தல், பணம் பற்றாக்குறை, கடன் வாங்குதல் இப்படிப் பல தொல்லைகளையும் உண்டாக்குவதாகவே இருக்கிறது. பெரும்பாலரது குடும்ப வாழ்க்கை சந்தோஷங்களும் அவ்வப்போது கிட்டும். அன்போடு அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது. ஆயினும், அன்பு