பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 認8。 எவ்வாறு வரவேற்கப்படுகின்றன என்று தெரிந்துகொள்ளவும் நான் விரும்பியதில்லை. நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். இப்பவும் எழுதுகிறேன். என் எழுத்துக்களை எவ்வளவோபேர் விரும்பிப் படித்து ரசித்திருக்கிறார்கள். அவற்றால் பயன் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் எழுதிய கடிதங்களாலும் உற்சாக மொழிகளாலும் ஊக்கமடைந்து முன்னேறியவர்களும் இருக்கிறார்கள் வருடக்கணக்கில் ஒரு சிறு கடிதத்தைப் பாதுகாத்து, அதைப் படித்து மகிழ்ச்சி அடையமுடிகிறது அவர்களால் என்பதை எல்லாம் அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் பிற்காலத்தில் எனக்குக் கிட்டின. எனவே நான் உழைத்தது வீணாகவில்லை என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிப் புகழும் பணமும் பெறமுடிந்துள்ள எழுத்தாளர்களைப் போல நான் புகழ் வெளிச்சமும் பணவரவும் பெற்றதில்லைதான். ஆனாலும் தமிழகம் நெடுகிலும், இலங்கையிலும் எண்ணற்ற நண்பர்களை என் எழுத்துக்கள் எனக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அதுவே பெரும் பேறு ஆகும். எழுத்துலக வாழ்க்கை எனக்கு மனநிறைவை-ஆத்ம திருப்தியைப் பெற்றுத் தந்திருக்கிறது. மனிதருக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கை நம் நாட்டில் காலம் காலமாக நில்ைபெற்றிருக்கிறது. அப்படி ஒரு மறுவாழ்வு இருக்குமானால், அந்த வாழ்விலும் நான் எழுத்தாளன் ஆக வாழவே விரும்புவேன். நான் பார்த்துப் பழகியிராத பலப்பலர் என் எழுத்துக்களினால் ஈர்க்கப்பட்டு என்னிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை அறிய நேர்கிறபோது நான் உள நெகிழ்ச்சி அடைகிறேன். மனிதர்களை நேசிப்பதும், மனிதர்களால் நேசிக்கப்படுவதும்தான் இவ் வாழ்க்கையில் மனிதர்கள் அடையக்கூடிய நற்பேறுகளில் எல்லாம் மிக முக்கியமானது என நான் நம்புகிறேன்.