பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:08 வாழ்க்கைச் சுவடுகள் பற்றி எழுதவேண்டும் எழுதக் கூடிய பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கலாம் - இவற்றுக்கெல்லாம் நீண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அது வாசிக்கப்படும். உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது பற்றிக் கருத்து கூற வேண்டும். அவ்வளவு தான். ஒரு வருடம் ஆலோசனைக் குழுவின் கூட்டம் உடுப்பியில் நடைபெற்றது. அங்கே கன்னட மொழிக்கவிஞர் ஒருவரைப் பற்றிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதர மொழிகளின் குழுவினரும் வந்திருந்தார்கள். கருத்தரங்கு ஆலோசனைக் கூட்டம் எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் - நா. பார்த்தசாரதி, நான் மற்றும் நான்கு பேர்- உடுப்பி, மங்களுர் எல்லாம் சுற்றிப் பார்த்தோம். முகாம்பிகை கோயிலுக்குப் போனோம். அங்கிருந்து தர்மஸ்தலா என்ற இடம் சென்றோம். தர்மஸ்தலா, மலைமீது நெடுந்தொலைவு சென்று சேரவேண்டிய இடம். நல்ல பாதை இருந்தது. மலை வளத்தையும் இயற்கை வனப்புகளையும் ரசித்தபடி காரில் வசதியாகப் பயணம் போகலாம். தர்மஸ்தலாவின் முக்கியச் சிறப்பு, அங்கே தினசரி பலநூறு பேருக்கு இலைபோட்டு, உண்போர் வயிறும் மனமும் நிறைவு பெறும் அளவில், சாப்பாடு பரிமாறப்படுகிறது. ராஜகுடும்பத்தைச் சேர்ந்த வள்ளல்மனம் படைத்த செல்வர் ஒருவர் அப்படி அன்னதானம் செய்கிறார். ஏகப்பட்ட பேர் வந்து உண்டு மகிழ்கிறார்கள். சாப்பாடு வழங்கப்படுகிற இடம் பெரிய கட்டிடம், அது வளமும் பசுமையும் நிறைந்த சூழலில் அமைந்திருக்கிறது. வள்ளலும் இனியவராய், நல்ல தோற்றம் உடையவராய் விளங்கினார். நாங்கள் தர்மஸ்தலத்தைப் பார்ப்பதற்காகத்தான் போனோம். வள்ளல் பண்புடன் உபசரித்து, உணவு உண்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்றார். ஆனால் அவரது விருந்துபசாரத்தை ஏற்றுக்கொள்ளப் போதுமான நேரம் எங்களுக்கு இல்லை. மங்களுர் சென்று, குறிப்பிட்ட நேரத்தில், சென்னை செல்லும் ரயில் வண்டியைப் பிடித்தாக வேண்டிய அவசரத்தில் நாங்கள் இருந்தோம். எனவே அங்கு உணவுக்காகத் தங்காது உடனேயே திரும்பிவிட்டோம். தர்மஸ்தலத்துக்குப் போனதும் வந்ததும் மனோகரமான பிரயாணம் ஆகும். நான் புதுடில்லி போய் வருவதற்கும் சாகித்ய அகாதமி உதவியது. 1987இல் புதுடில்லியில், சாகித்ய அகாதமியின் ஆதரவில் புதுமைப்பித்தன் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு, அகில இந்திய அளவில் கவனிப்புப் பெற்றுத் தருவதற்காக, இந்தியத் தலைநகரில் கூட்டப்பட்ட முதல் கருத்தரங்கு அதுதான். அப்படி ஒரு கருத்தரங்கைக் கூட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயலுக்குத் துண்டியவர் க.நா. சுப்ரமண்யம். சாகித்ய அகாதமியில்