பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 忍盔墨 பழகினார்கள். காரில் கன்யாகுமரிக்கு அழைத்துப் போனார் சு.ரா. அங்குக் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இருட்டியதும் திரும்பினோம். வழிநெடுக. சுந்தரராமசாமி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே வந்தார். நாகர் கோவிலிலும் தனித்த ஒரு ரஸ்தாவில் இருள் செறிந்த மரங்களின் அடியில், காரில் அமர்ந்தபடியே ரசமான உரையாடலில் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு வீட்டிலும் இரவில் வெகுநேரம் வரை நண்பர் பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசினார். இங்கிலீஷ் இசைப் பாடல்களின் 'ரிக்கார்டுகளை ஒலிக்கச் செய்து சந்தோவித்தார். ஆனாலும், சுரா பேட்டி தர மனம் கொண்டாரில்லை. பேட்டி என்ன பேட்டி' என்று சொல்லிச் சிறுசிரிப்பு உதிர்த்தார். பேட்டி' என்பதை விட interview என்று சொல்வது எடுப்பாக, நன்றாக இருக்கிறது என்றார். 'நீங்கள் கேள்விகளைக் கொடுத்துவிட்டுப் போங்க. நான் பதில் எழுதி அனுப்புகிறேன்' என்று சொல்லிவைத்தார். தி.கசியும் கேள்விகளை அவரிடம் கொடுத்தார். . அதன்பிறகும் சுரா பேட்டி'க் கேள்விகளுக்கான பதிலை எழுதி அனுப்பவேயில்லை. சுந்தர ராமசாமி பேட்டி தீபம் இதழில் வரவேயில்லை. தி.க.சியும் நானும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போனோம். தாமரை இதழில் கதை கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களை நேரில் கண்டு பேசி அறிமுகம் செய்து கொள்ளலாமே என்ற நினைப்போடு. எங்கள் வருகையைப் பற்றித் திருவனந்தபுரம் எழுத்தாளர்களுக்கு தி.க.சி. ஏற்கெனவே எழுதியிருந்தார், நாங்கள் நீல. பத்மநாபன் வீட்டைத் தேடிக் கண்டு கொண்டோம். அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார். சற்று நேரத்தில், ஆ. மாதவன், டி.கே. துரைஸ்வாமி நகுலன், சண்முகம் சுப்பையா ஆகியோரும் வந்துசேர்ந்தனர். உற்சாகமான இலக்கியச் சந்திப்பு அது. நாங்கள் நீல. பத்மநாபன் வீட்டில் தங்கினோம். மறுநாள், பத்மநாபனின் மாமனார் காரில் திருவனந்தபுரத்தில் பார்க்கவேண்டிய இடங்களான கோயில், மியூசியம், சித்திர சாலை போன்றவற்றுக்கு அழைத்துப் போய்க் காட்டினார்கள். சாலை பஜாரில் உள்ள மாதவன் கடைக்கும் போனோம். மறுநாள் கோவளம் கடற்கரைக்கும், அதன் பிறகு செவ்வறா என்ற இடத்துக்கும் போய் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தோம்.திருவனந்தபுரம் தமிழர்கள், அவர்களின் சங்கங்கள் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டோம். நாங்கள் சும்மா நட்புமுறைச் சந்திப்புக்காகத்தான் போயிருந்ததால், இலக்கியக் கூட்டம்-பேச்சு நிகழ்ச்சி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை சில வருடங்களுக்குப் பின்னர் நான் மீண்டும் திருவனந்தபுரம் போக நேரிட்டது. பேராசிரியர் ஜேசுதாசன் பணிபுரிந்த கல்லூரியின் தமிழ்த்துறையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஆர். சண்முகசுந்தரம் நாவல்கள் பற்றி சுந்தர ராமசாமியும்