பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாழ்க்கைச் சுவடுகள் நானும் கட்டுரை வாசித்தோம். வேறு சிலரும் சண்முகசுந்தரத்தின் படைப்புகள் பற்றிப் பேசினார்கள். நண்பர் ஆ. மாதவன் தான் கல்லூரிக்கு என்னை அழைக்கும்படி பரிந்துரை செய்தார் என்று புரிந்தது. அடுத்த முறை நான் திருவனந்தபுரம் போனது, தமிழ்ச் சங்கம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆ. மாதவன் சிறுகதைகள்' என்ற புத்தகம் வெளிவந்திருந்தது. அதன் அறிமுகக் கூட்டம் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறை நான் மாதவனின் விருந்தாளியாகச் சில தினங்கள் தங்கியிருந்தேன் - என் வாழ்க்கையில் நான் அதிகமாகப் பயணம் செய்தது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் தான் வருடம் தோறும் இங்கிருந்து திருநெல்வேலி போய் ராஜவல்லிபுரம் சேர்ந்து, அங்குச் சில மாதங்கள் தங்குவதும் எனது வாழ்க்கைமுறைகளில் ஒன்றாக அமைந்திருந்தது. நான் வெளிநாடு எங்கும் போக விரும்பியதில்லை. பாஸ்போர்ட் விசா போன்ற தேவைகளும் கட்டுப்பாடுகளும் எனக்குப பிடிக்காத விஷயங்களாகதொல்லைகளாகவே இருந்தன. அப்படியும் இலங்கை போய் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல்வேறு சமயங்களில் பல நண்பர்கள் விரும்பி அழைத்தும்கூட, நான் இலங்கை போவதைத் தவிர்த்தே வந்தேன். ஆயினும் 1996இல் நான் அங்கே செல்ல நேரிட்டது. அப்போது எனக்கு வயது 76 ஆகியிருந்தது. அந்தப் பயணம் பற்றிப் பின்னர் கவனிக்கலாம். 34 எனது அறுபதாம் ஆண்டு நிறைவை 1980இல் கொண்டாட வேண்டும் என்று நண்பர்கள் தீர்மானித்தார்கள் விழாக்கள் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமில்லை என்ற போதிலும், நண்பர்கள் விடுவதாக இல்லை. தி.க.சி. தீவிர உற்சாகத்துடன் செயல்பட்டு நண்பர்கள் பலரையும் தூண்டி மணி விழா கொண்டாடுவதில் முனைப்பாக இருந்தார். ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் என்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் முயற்சிகளும் அவருடைய உத்தம குணத்தை எடுத்துக் காட்டக் கூடியன. எனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், பல வாரங்களுக்கு முன்னதாகவே அவர் நண்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி நினைவூட்டுவார். சென்னையில் இருக்கிற நண்பர்களை நேரில் சென்று என்னைப் பாராட்டி வாழ்த்தும்படி தூண்டுதல்