பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌室。 ாைழ்க்கைச் சுவடுகள் எனது எழுபதாண்டு நிறைவும் சிறுஅளவில் கொண்டாடப்பட்டது. எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு 'பவள விழா என்று சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. எழுபதாம் ஆண்டு நிறைவின் போதும் எனது புத்தகங்கள் இரண்டு வெளியாயின. என்னிடம் மிகுந்த அன்பும் பெரும் மதிப்பும் கொண்டிருக்கிற டாக்டர் தயானந்தன் பிரான்சிஸின் நல்லெண்ணமே இதைச் சாத்தியமாக்கியது. எனது சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து "அருமையான துணை' என்றும் குறுநாவல்களைச் சேர்த்து 'மன்னிக்கத் தெரியாதவர்' என்றும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) வெளியீடுகளாகப் பிரசுரிக்க டாக்டர் தயா ஏற்பாடு செய்தார். அத்துடன் எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் என்ற வரலாற்று நூலையும் CLS வெளியீடாக அவர் கொண்டு வந்தார். இவ்வரலாறு மு. பரமசிவம் எழுதியது. ஆகும். எழுத்தாளர் மு. பரமசிவம் தொழிலால் ஒரு பைண்டர் அச்சகத்தில் பணிபுரிபவர். அவர் ஆர்வம் காரணமாக எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு நல்ல வெற்றிகள் கண்டிருக்கிறார். நாவல், சிறுகதைகள் தொகுப்பு வெளியிட்டுள்ளார். 'கற்சிலை என்ற சிற்றிதழைச் சிறிது காலம் நடத்தினார். அனைத்தினும் மேலாக, எழுத்தாளர் விந்தனிடம் தூய அன்பும் ஆழ்ந்த நட்பும் கொண்டுள்ளதனால், விந்தனின் சிறப்புகளைத் தமிழகத்துக்கு உணர்த்தும் வகையில் பெரும் பணிகள் ஆற்றியுள்ளார். விந்தன் வரலாறு விந்தன் நாவல்கள் பற்றி விமர்சனங்களின் தொகுப்பு விந்தன் கட்டுரைகள் தொகுப்பு என்றெல்லாம் பல நூல்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அவற்றுடன் முக்கியமான வரலாற்று நூல்களைப் பாராட்டத் தகுந்த முறையில் மு. பரமசிவம் எழுதியிருக்கிறார். கவிஞர் தமிழ் ஒளி நாடு போற்றும் நாரணதுரைக்கண்ணன் எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்' எழுத்தாளர் கு அழகிரிசாமி, தி.கசி என்றொரு விமர்சனத் தென்றல் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவரால் எழுதப்பட்டவை. தி.க.சியின் வரலாறு தவிர்ந்த ஏனைய நூல்கள் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியீடுகளாகும். தி.க.சி. வரலாறு நர்மதா பதிப்பகம் வெளியீடு. - - எழுபத்தைந்தாவது ஆண்டு பவளவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நன்கு நடைபெற்றது. தி.க.சி.யின் யோசனைகளின்படி, பா. கலியாணசுந்தரம் பொறுப்பேற்று. ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தினார். வக சிறுகதைகள், நாவல்கள். கட்டுரைகள், கவிதைகள் என்று தனித்தனிக் கருத்துரைகள் வழங்குவதற்குத் தகுந்தவர்கள் முன்வந்திருந்தனர். இந்த நூற்றாண்டின் அபூர்வ மனிதர் மாமனிதர், மகாத்மா, பெரும் தியாகங்கள் புரிந்தவர் என்றெல்லாம் அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர்