பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 芝胺5 பா. கலியாணசுந்தரம். நடமாடும் சேவை மையம் என்று பத்திரிகையாளர்களால் போற்றப்படுபவர் அவர். பணம்-பணம் என்று பணத்தாசை பிடித்து அலைகிறவர்கள் நிறைந்த மனித சமுதாயத்தில், பல ஆயிரங்கள்- லட்சங்கள் கிடைத்தாலும் பணப்பசி தனியாமல் மேலும் மேலும் பணம் திரட்டுவதிலேயே கருத்தாக உள்ளவர்கள் மிகுந்த நாட்டில் தனக்குக் கிடைத்த பல ஆயிரங்களையும் லட்சங்களையும் தாராள மனத்துடன் ஏழை எளியவர்களின்-முக்கியமாக ஏழைச் சிறார்களின் - நலனுக்காக அள்ளிக் கொடுத்த 'பொன்மனச் செம்மல் கலியாணசுந்தரம். திருநெல்வேலி மாவட்டம், களக்காடு எனும் ஊருக்கு அருகில் உள்ள கருவேலங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பா. கலியாணசுந்தரம் ஊரில் இருந்த போதே, அங்குள்ள ஏழைச் சிறுவர், சிறுமியர் கல்வி அறிவு பெறமுடியாது கஷ்டப்படுவதைக் கண்டு உணர்ந்து அத்தகைய குழந்தைகளின் நலனுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணம் வளர்த்துவந்தார். அவ்வப்போது தம்மால் இயன்ற அளவு உதவிகளும் செய்யலானார். கல்வி கற்றுத் தேர்ந்து நீவைகுண்டம் குமரகுருபரன் கல்லூரியில் நூலகராகப் பதவிஏற்றார் அவர் காலப் போக்கில், ஒரு பேராசிரியர் அளவு சம்பளம் பெறலானார். தனது மாதச் சம்பளத்தில், தமது செலவுகளுக்கென அறுநூறு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, மீதித் தொகை முழுவதையும் குழந்தைகளின் கல்விப் பயிற்சிக்காகவும், அவர்களுக்குத் தேவையான உடை, பாடப் புத்தகங்கள் முதலியன வாங்கி அளிப்பதற்காகவும் ஈடுபடுத்தினார். அதற்காக சர்வதேசக் குழந்தைகள் நலச் சங்கம் என்றொரு அமைப்பையும் உருவாக்கினார். பூர்வீகச் சொத்தில் தமது பங்காகக் கிடைத்த பாகத்தையும் இந்த அமைப்புக்கே வழங்கினார். மேலும், அவ்வப்போது முறைப்படி வந்து சேர்ந்த சம்பள உயர்வு விகிதப்படி கிடைத்த லட்சக்கணக்கான டாக்கிப் பணம் போன்றவற்றையும் குழந்தைகளின் நலனுக்கே அளித்துவிட்டார். தம் பங்கு மட்டும் போதாது. மற்றவர்களின் ஒத்துழைப்பும் தேவை என்று ஆளுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் ஏற்படுத்தி அனைவரிடமும் பணம் வசூல் செய்து நலப்பணியில் ஈடுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கலியாணசுந்தரம் மாதச்சம்பளம் பெறும் தனிநபர்களில் மிக உயர்ந்தபட்ச அளவில் பரோபகாரத்துக்காக நிதிகள் வழங்கிய தனிமனிதர் என்ற பெருமை இவரை வந்தடைந்தது. தமிழ்நாட்டிலும், ஆந்திரா, ஒரிஸ்ஸா போன்ற இதர மாநிலங்களிலும் பெரும் மழை வெள்ளத்தால் சேதங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், மக்களிடம் நிதி திரட்டி, நேரே சென்று. பாதிக்கப்பட்டுப் பொருள் இழந்து சிரமப்படுகிறவர்களின் குழந்தைகள் பற்றி விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் முனைப்பாக இருந்தார் அவர்