பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 வாழ்க்கைச் சுவடுகள் மிக எளிமையாக உடை உடுத்து, சாதாரணனாக வாழ்கிற பா. கலியாணசுந்தரம், தமது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய கண்கள் தேவைப்படுகிறவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கண்தானம்' செய்திருக்கிறார். அத்துடன், தமது உடல் புதைக்கப்படவோ எரிக்கப்படவோ வேண்டாம் மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். பூரீவைகுண்டம் ஊரில் குழந்தைகளுக்காக ஒரு பூங்கா அமைப்பதும், குழந்தைகள் நூலகம் ஏற்படுத்துவதும் அவரது திட்டப்பணிகளாகும். மேலும், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்காக ஒரு பல்கலைக் கழகம் அமைக்கும் முயற்சியிலும் தீவிரமாக முனைந்து செயல்பட்டு வருகிறார். என் நெடுங்கால நண்பர்களில் பா. கலியாணசுந்தரமும் ஒருவர். ராஜவல்லிபுரத்தில் பள்ளி ஆசிரியராக இருந்த பார்வதிநாதன் என்பவரின் உறவினரான அவர் அடிக்கடி அவ்வூருக்கு வருவார். பார்வதிநாதன் மூலம் அறிமுகமாகிப் பின் என் நண்பரானார். தமக்கு வரக்கூடிய மனைவி தன்னுடைய இலட்சியப் பணிகளுக்குத் துணைபுரியமாட்டாள் தடங்கலாகவே இருப்பாள் என உணர்ந்து, தமக்குத் திருமணம் வேண்டாம் என்று உறுதிபூண்டு, பிரமச்சாரியாகவே வாழ்கிறார் அவர். இப்போது சிறிது காலமாக, சென்னையில் பாலம் எனும் அமைப்பை நிறுவிப் பொதுப்பணிகள் புரிவதில் தமது காலம் முழுவதையும் செலவிடுகிறார் பா. கலியாணசுந்தரம், உலக அளவில் கவனிப்புப் பெற்று. இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்' என்ற கவுரவத்தை அடைந்துள்ளார் அவர் அவருக்குத் தற்போது வயது 61. 35 அமைதியாக விளம்பர வெளிச்சத்துக்கு ஆசைப்படாமல் சமூக நலப் பணிகள் புரிந்து கொண்டிருக்கும் அமைப்புகள் ஆங்காங்கே இருக்கின்றன. அறப்பணிகளுக்காக அயல்நாடுகளிலிருந்து தாராளமாகப் பணம் பெறமுடியும் என்று கண்டு கொண்டவர்கள் சமூகநல அமைப்பு என்று ஏதாவது பெயர் வைத்துக் கொண்டு மேல்நாடுகளிலிருந்து பணம் பெற்றுச் சுகபோக வாழ்க்கைவசதிகளைப் பெருக்கிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறவர்களும் நாட்டின் செயல்புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் சமூகத்தில் வறுமைநிலையில் வசிக்கிறவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு அமைப்பு ஏற்படுத்தி, அவர்களுக்கு வாழும் வகைகளைக் கற்றுக் கொடுப்பதற்கு ஆவன செய்யும் இலட்சியவாதிகள் போற்றத் தகுந்த