பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} வாழ்க்கைச் சுவடுகள் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தெருக்களில் ஆள் நடமாட்டம் இராது. குற்றாலம் தெருவிளக்கை வீட்டுக்கு எடுத்து வந்து விடுவார். அதன் வெளிச்சத்தில் நண்பர்கள் நாவல் படிப்பார்கள். படிப்பு முடிந்ததும் விளக்கை உரிய இடத்தில் கொண்டு போய் வைத்து விடுவார்கள். நீதிபதியாகப் பதவி வகித்த முத்துசாமி ஐயர் மாணவப் பருவத்தில், வறுமை காரணமாக தெரு விளக்கின் கீழ் அமர்ந்து பள்ளிப் பாடங்களைப் படிப்பது வழக்கம். அப்படிப் படித்து அவர் உயர்நிலை அடைந்தார் என்று நாம் படித்திருக்கிறோம் அல்லவா? நாமும் தெருவிளக்கில் படிக்கிறோம். நாமும் உயர்ந்தவர்களாவோம். ஐயர் தெருவில் விளக்குக் கம்பத்தின் கீழே இருந்து படித்தார். நாம் தெருவிளக்கை வீட்டில் வைத்துக் கொண்டு படிக்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்' என்று குற்றாலம் பிள்ளை விரிவுரை ஆற்றுவார். எல்லோரும் எப்போதும் எங்கள் வீட்டில் தான் கூடிப் பொழுது போக்குவார்கள். நாங்கள் வசித்த வீட்டின் மாடி பெரிதாய், விசாலமானதாக இருந்தது அவர்களுக்கு வசதியாயிற்று. இரண்டு வருடங்களில் ஏகப்பட்ட நாவல்களை இவ்வாறு படித்து முடிப்பது சாத்தியமாயிற்று. பிறகு ராஜவல்லிபுரத்தில் வசிக்க வந்தபோதும் பல நாவல்கள் கிடைத்தன. ராஜகோபாலகிருஷ்ண பிள்ளையின் அண்ணாச்சி ஆறுமுகம் பிள்ளையும் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். பலவகையான நாவல்களும், பத்திரிகைகளும் வாங்கிப்படித்தார். அவரிடம் விசித்திரமான பழக்கம் ஒன்று இருந்தது. ஒரு புத்தகம் அல்லது பத்திரிகையைப் படித்து முடித்ததும், முற்றிற்று என்று கடைசிப் பக்கத்தில் மையினால் எழுதிக் கையெழுத்திட்டு வைப்பார். இப்படிச் செய்யாவிட்டால், பின்னொரு நாளில் இந்தப் புத்தகத்தைப் படித்தோமா இல்லையா? என்ற சந்தேகம் வந்து விடும், படித்ததையே திரும்பவும் படிக்க நேர்ந்து விடும். அதைத் தவிர்க்கத்தான் இம்முறை என்று அவர் விளக்கம் தருவார். . ஜே.ஆர். ரங்கராஜூ எழுதிய ராஜாம்பாள் மோகனசுந்தரம் மற்றும் எஸ்.எஸ். அருணகிரிநாதர் நாவல்கள். தனசிங் என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை மற்றும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி முதலிய நாவல்கள் அவர் மூலம் படிக்கக் கிடைத்தன. அவர் பிரசண்ட விகடன் மாதம் இருமுறை இதழையும் வாங்கி வாசித்தார். அதில் நாரணதுரைக்கண்ணன், 'ஜீவா என்ற பெயரில் எழுதிய