பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. - வாழ்க்கைச் சுவடுகள் அது தமிழில் தனிரகமான பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. சிற்றிதழ்கள் பற்றிய தகவல்கள், பழங்காலத்துப் பத்திரிகைகளின் விவரங்கள். அயல்நாடுகளில் நடக்கும் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகள் முகவரிகள், பழம் பத்திரிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட அரிய விஷயங்கள். ஆண்டுதோறும் தோன்றிய சிற்றிதழ்களின் எண்ணிக்கையும் விவரங்களும், அவற்றில் நின்று விட்டவை போக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இதழ்களின் பெயர்கள் அடுத்த வருடங்களில் தரப்படும் கணக்கு போன்ற ஆய்வுச் செய்திகள் வெளியிடப்பட்டன. பயனுள்ள யோசனைகளைக் கூறும் கட்டுரைகளும் தரப்பட்டன. - சிற்றிதழ்ச் செய்தியில் முதலாவது இதழில் இருந்து நான் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தேன். கலாமோகினி, கிராம ஊழியன் ஆகிய மறுமலர்ச்சி இலக்கிய இதழ்கள் பற்றி எழுதினேன். அடுத்து, சிற்றிதழ்கள் செய்தவையும் செய்யத் தவறியவையும் என்ற தொடரை எழுதினேன். இக்கட்டுரைகளில் கூறப்பட்ட விஷயங்கள் தற்காலச் சிற்றிதழாளர்களுக்கு வெகுவாகப் பயன்படக் கூடியவை என்று சிற்றிதழ்கள் நடத்துகிற அன்பர்கள் பாராட்டி எழுதினார்கள். பொள்ளாச்சி நசன் பின்னர், தமிழ்வழிக் கல்விப் பயிற்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு உழைக்கத் தொடங்கினார். அதனால் சிற்றிதழ்ச் செய்தி தானாகவே நின்று விட்டது. எனினும் நசன் சிற்றிதழ்களைச் சேகரித்துப் பாதுகாப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார், இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான சிற்றிதழ்களை அவர் சேகரித்திருக்கிறார். அவற்றை வகைப்படுத்தி, அவற்றில் இடம் பெற்றுள்ள விஷயங்களைப் பட்டியலிட்டு, அட்டவணைகள் தயாரித்து, ஆய்வு ரீதியில் அவர் பெரிதும் உழைத்துள்ளார். இந்தப் பணிக்கென்றே தம்மைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள நசன் தமது காலத்தையும் பணத்தையும் உழைப்பாற்றலையும் ஆர்வத்தோடு ஈடுபடுத்தி வாழ்கிறார். அதனால் தமக்குத் திருமணம் வேண்டாம் என்ற உறுதியும் பூண்டிருக்கிறார். சிவகாசி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட சிற்றிதழ்கள் பரிசீலனை செய்யப்பெற்று. தகுதி அடிப்படையில் மூன்று இதழ்கள் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிற்றிதழ்கள் நடத்துவதில் உள்ள சிரமங்கள் மாநாட்டில் சுட்டிக்காட்டப் பெற்றன. அவற்றை நீக்குவதற்காகவும், உரிமைகளை வலியுறுத்தி அரசாங்கத்திடமிருந்து உதவிகள் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதற்காகவும் சிற்றிதழாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. குன்றம் மு. இராமரத்னம் அதன் தலைவரானார். அவர் உற்சாகமாகக் காலம், பணம், உழைப்பு முதலியவற்றை ஈடுபடுத்தி, சிற்றிதழ்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டு