பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 தொடர்கதைகள் யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்? இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்', 'சீமாட்டி கார்த்தியாயினி முதலியன வாசகர்களை அதிகம் ஈர்த்தன. பள்ளிப் படிப்புக் காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளும் படிப்பதற்கும் கிடைத்தன. விநாயகம் என்பவர் ஆசிரியராக இருந்து நடத்திய 'மை மேகசின் சிறந்து விளங்கியது. அதில் நல்ல கதைகள், கட்டுரைகள். நகைச்சுவை விஷயங்கள் சுவாரசியமாக வந்தன. அவற்றுடன் சுவாமி சிவானந்தா எழுதிய ஆன்மீகச் சிந்தனைகள் (ஸ்பிரிச்சுவல் லெஸ்ன்ஸ்) முக்கியத்துவம் பெற்றிருந்தன. "மை மேகசின் வெற்றிகரமாக நடப்பதைப் பார்த்து 'ஆனந்த விகடன்' எஸ்.எஸ். வாசன் மெரிமேகசின்' என்றொரு இதழை ஆரம்பித்து நடத்தினார். அச்சு அமைப்பிலும் கதைகளுக்கான சித்திரங்களிலும் இது எடுப்பாகத் திகழ்ந்தது. புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் எஸ்.வி. வி. இதில் தொடர்ந்து எழுதினார். பாலா தி பேட் உமன் தேவி தி டான்ஸர்' BalaThe Bad Woman. Devi The Dancer என்ற தொடர்கதைகள் கவர்ச்சிகரமான படங்களுடன் பிரசுரம் பெற்றன. ஆனாலும், மெரி மேகசின் ரொம்ப காலம் நடை பெறவில்லை. மை மேகசின் நீண்டகாலம் வாழ்ந்தது. ஆங்கில நூல்களும் எனக்குப் படிக்கக் கிடைத்து வந்தன. ஐந்தாம் வகுப்பு முதல், அநேக வருடங்கள். நன்மாணாக்கன் என்பதற்கான பரிசு எனக்கு அளிக்கப்பட்டது. எட்டாம் வகுப்பிலிருந்து தமிழ்ப் பாடத்துக்கான முதல் பரிசை நான் பெற்று வந்தேன். சில வருடங்களில் ஆங்கிலத்துக்கான பரிசும் பெற்றேன். அனைத்துப் பரிசுகளும் நல்ல நல்ல புத்தகங்களாகவே வழங்கப்பட்டன. பள்ளி நூலகத்திலிருந்தும் வாரம் தோறும் தவறாது புத்தகம் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். எக்காலத்திலும் புத்தகங்கள் படிப்பதில் தணியாத ஆர்வம் உடையவனாகவே இருந்தேன். 5 கால ஓட்டத்தினூடே எங்கும் மாறுதல்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. தனி நபர்களின் வாழ்விலும் சமூகம் ஊர்நாடு முதலியவற்றிலும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் திகழ்ந்தவாறு இருக்கின்றன. சில மெதுமெதுவாகவும் அநேகம் வேகமாகவும் ஏற்படுகின்றன. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் விளைவித்து வந்த மாறுதல்களோடு இதர பல மாறுதல்களும் புதுமைகளும் தோன்றிக் கொண்டிருந்தன. நான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில்: 1930 களில், பாளையங்கோட்டை, திருநெல்வேலிக்கு அப்போது தான்