பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234? வாழ்க்கைச் சுவடுகள் தொடர்ந்து பதவி ஏற்ற டேவிட் பாக்கியமுத்து கருத்தரங்குகள் கூட்டுவதையும் சிறப்பான முறையில் நிறைவேற்றினார். பாக்கியமுத்து நல்ல எழுத்தாளரும் ஆவார். நாடகம், சிறுகதை, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் என்று. குறிப்பிடத் தகுந்த அளவில் அவர் எழுதியிருக்கிறார். அவர் மனைவி சரோஜினி பாக்கியமுத்துவும் திறமையான எழுத்தாளர் நல்ல மொழிபெயர்ப்பாளர். மாதவய்யா நாவல்களை அவர் தமிழாக்கியுள்ளார். சாகித்ய அகாதமிக்காக அவர் சில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவர் எழுதிய விவிலியமும் தமிழும் தனிச் சிறப்புடைய நூல் ஆகும். பாக்கியமுத்து பதவி வகித்த காலகட்டத்தில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் - நண்பர் வட்டம் கருத்தரங்கு என்ற தலைப்பிலேயே கூட்டங்கள் நடத்தப்பெற்றன. பின்னர் அவர் அந்த நிறுவனத்திலிருந்து விலகி, வேறு நிறுவனத்துக்குப் பணிபுரியச் சென்றுவிட்டார். அங்குப் பதவி வகித்த பிறகு அவர் சொந்த ஊரான பாளையங்கோட்டை சேர்ந்தார். ‘நண்பர் வட்டம்’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழை வெளியிட்டார். தரமான அச்சிற்றிதழ் பல வருடகாலம் நடந்தது. இயன்ற அளவு இலக்கியப் பணி ஆற்றியது. 'நண்பர் வட்டம்' என்ற பெயருக்குப் பாக்கியமுத்து உரிமை கொண்டாடியத்ால் அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் கருத்தரங்கிற்குப் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் - இலக்கிய நண்பர்கள் வட்டம் கருத்தரங்கு என்று குறிக்கப்படலாயிற்று. இக் கருத்தரங்குகளில் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்து கலந்து கொள்வர். கிறிஸ்தவ எழுத்தாளர்களோடு மற்ற எழுத்தாளர்களும் வந்து கட்டுரைகள் வாசிப்பது விவாதங்களில் ஈடுபடுவது என்று உற்சாகமாகப் பங்கேற்பார்கள். கருத்தரங்குப் பொருள்கள் முற்போக்குச் சிந்தனைப் பார்வை கொண்டனவாகவே இருக்கும். தமிழ் இலக்கியத்தில் விடுதலை உணர்வு தமிழ் இலக்கியத்தில் தொழிலாளர் பிரச்சினைகள், மனித மாண்பு, மனிதநேயமும் மதநல்லிணக்கமும், பெண் உரிமைப் பிரச்சினை சாதி ஒழிப்பு. பண்பாட்டுச் சிதைவுகளுக்கு எதிர்ப்புகள் - இப்படி ஆண்டுக்கு ஒரு பிரச்சினை அடிப்படையில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் முதலியன ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் இருவருடங்கள் கருத்தரங்கில் இருபதாம் நூற்றாண்டில் தடம் பதித்த படைப்பாளர்கள் என்ற நோக்கில் ஆய்வுக்கட்டுரைகள் தயாரிக்கப்பெற்று வாசிக்கப்பட்டன. சி.எல்.எஸ் நண்பர் வட்டக் கருத்தரங்குகளின் ஆய்வுக் கட்டுரைகள் வருடம் தோறும் புத்தகமாக்கப்பட்டு அடுத்த ஆண்டுக் கருத்தரங்கில்