பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23# வெளியிடப்படுவதும் வழக்கமாக நடைபெறுகிறது. இத்தொகுப்புகள் நல்ல விமர்சன நூல்களாகவும் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவக் கூடிய துணைப் புத்தகங்களாகவும் அமைந்து விளங்கும் தன்மையன. இக் கருத்தரங்குகளில் பல வருடங்கள் நான் கலந்து கொண்டு கட்டுரை படித்திருக்கிறேன். சமீப காலத்தில் சில நாளில் நிறைவுரையும் வழங்கும் பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்தது. டாக்டர் தயா என்மீது கொண்டுள்ள அன்பும் மதிப்புமே இதற்குக் காரணம் ஆகும். கருத்தரங்குகள் வாயிலாக இலக்கிய ஆய்வுக்கு உதவிக் கொண்டிருக்கும் இன்னொரு அமைப்பு பற்றியும் கூறவேண்டும். மொழி வளர்ச்சிக்குத் தேவையான இதழியல் ஆய்வுக்கு இந்த அமைப்பு மிக முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வுமையம் தான் அது. தமிழில் இதழியல் வளமாக, வலிமை பொருந்திய ஒரு சக்தியாக உருவாகி வளர்ந்துவந்திருக்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு இதழ்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. சமூக வளர்ச்சிக்கும் தனி மனித மேம்பாட்டுக்கும் மொழி வளம் பெறவும் இலக்கியம் வளர்வதற்கும் நாட்டின் அரசியல், பொருளாதார, வணிக, அறிவியல், ஆன்மிகத் துறைகளில் மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்படவும் நாட்டு மக்கள் விழிப்பு உணர்வு பெறுவதற்கும் பத்திரிகைகள் பக்கபலமாக நின்று செயல்புரிந்துள்ளன-புரிகின்றன. தமிழ் இதழியல் வரலாற்றையும் வளர்ச்சியையும் சாதனைகளையும் கவனத்துக்குக் கொண்டுவரும் விதத்தில் ஆய்வு முயற்சிகளும் வரலாற்று ரீதியான பதிவுகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தினும் மேலானதும் மிக முக்கியமானதும் மிகுந்த பயனுள்ளதுமான பெரும் முயற்சி என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்திய 'இதழியல் கருத்தரங்குகள்' எனும் திட்டமிட்ட செயல்பாடே அது. திறமையாகத் திட்டம் வகுக்கப்பட்டு, சீரான முறையில் 1997.1998,1999 ஆம் வருடங்களில் இக் கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள் குறித்து விரிவான கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட்டன. இத்தலைப்பில் 4 கருத்தரங்குகள், வெவ்வேறு காலத்தில் கூட்டப் பெற்றுள்ளன. திராவிட இயக்க இதழ்கள் பற்றி 2 கருத்தரங்குகள், மற்றும் தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள். மகளிர் இதழ்கள். தமிழ்