பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23莎 மறைமலை அடிகள், கடிதங்களாகவே ஒரு நாவலைப் படைத்திருக்கிறார். 'கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற பெயருடைய நாவல் அது. சிலர் தங்கள் கடிதங்கள் இலக்கியத் தகுதி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், பலருக்கும் எழுதுகிறபோது, அக்கறை எடுத்துக் கடிதங்களை வரைவார்கள். ாேதனைகள், பொன்மொழிகள், அறிஞர்களின் சிந்தனைகள், திருக்குறள் மேற்கோள் எல்லாம் கலந்து கடிதம் எழுதுவர்கள். அத்தகையவை படித்து மெச்சப்படுவதற்காக எழுதப்பட்ட செயற்கைக் கடிதங்களாகத்தான் இருக்கும். உயிர்ப்பும் உணர்வும் எழுதுகிறவரின் சுய ஆளுமையும் வெளிப்படுகிற இயல்பான எழுத்துக்களாக இரா. கடித இலக்கியம் என்பதன் இரண்டாவது வகை இயல்பாகப் பல விஷயங்கள் பற்றியும் நேரே இருந்து உரையாடுவது போல் இருக்கும். எப்பொருள் குறித்தும் மனம் திறந்து பேசப்படுகிற தன்மையில் இருக்கும். வலிந்து செய்யப்படுவன அல்ல. அனுபவமும் அன்பும் தானாகவே எழுத்தில் இடம் பெறுகிற இயல்பான பதிவுகளே கடிதங்களில் இலக்கியத் தன்மை உடையனவாக மதிக்கப்படும். ரசிகமணி என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த டி.கே. சிதம்பரநாத முதலியார் அவ்விதமான கடிதங்களை வாழ்நாள் முழுதும் எழுதிக் கொண்டிருந்தார். டி.கே.சி. யின் அனுபவ ஞானத்தை, ரசனையை, வாழ்க்கையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை அக்கடிதங்கள் புலப்படுத்துகின்றன. அவை தொகுப்பு நூல்களாக வெளிவந்து ரசிகர்களுக்கு இனியவிருந்து ஆயின. நண்பர்களுக்கும் அறிஞர்களுக்கும் குடும்பத்தலைவியருக்கும் அவர் அன்பும் நட்பும் கொண்டிருந்த பலருக்கும் - எழுதிய கடிதங்கள் ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் என்ற புத்தகமாகப் பிரசுரம் பெற்றது. டி.கே.சி.யின் நண்பரும் ரசிகருமான பாஸ்கரத் தொண்டமான் தொகுத்தளித்த புத்தகம் அது. ரசிகமணியின் மற்றொரு ரசிகரும் நண்பருமான நீதிபதி எஸ்.மகராஜன் அவரது சகோதரி வேலம்மாளுக்கு டி.கே.சி. எழுதிய கடிதங்களைத் தொகுத்து வெளியிட்டார். ரசிகமணி டிகேசி. கடிதங்கள் - வேலம்மாளுக்கு எழுதியவை என்ற பெரிய புத்தகம் அது. டி.கே.சி.யின் கடிதங்கள் வாழ்க்கையை, மனிதர்களை. உலக இனிமைகளை, இசை கலை, கவிதை முதலிய பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சுவாரசியமான எண்ணங்களைக் கூறும் எழுத்துக்களாகும். ஒரு ரசஞ்ஞானியின் அனுபவ ஞான வெளிப்பாடுகள் அவை, தமிழில் வெளிவந்துள்ள கடிதத் தொகுப்புகளில் ஆயன் கடிதங்கள் என்பதும் தனித்தன்மை கொண்டதாகும்.