பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 237 வெளியிடும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும், அதற்கு என் அனுமதி தேவை என்றும் கோரினார். அனுமதிக்கென்ன தாராளமாகச் செய்யுங்கள் ஆனால் கடிதங்களைச் சேகரிப்பது மிகச் சிரமமாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எண்ணற்ற பேருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். என் அண்ணாவுக்கு எழுதியதை விடத் தி.க. சிவசங்கரனுக்கு மிக அதிகமாக எழுதியுள்ளேன். ஆதவன் போன்ற இளைய நண்பர்களுக்கு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றை எல்லாம் சேகரிப்பது சாத்தியமில்லை என்று சொன்னேன். ஆதவன் புதுடில்லியில் நேஷனல் புக்ட்ரஸ்ட்டில் தமிழ்ப்பிரிவின் ஆசிரியராக வேலை பார்த்தார். திறமையான எழுத்தாளர். காகிதச் சிறகு என்ற பெரிய நாவல் தீபம்’ இதழில் தொடராக வந்து பின்னர் புத்தகமாகப் பிரசுரம் பெற்றது. சிறந்த சிறுகதைகளும் குறுநாவல்களும் எழுதியுள்ளார் அவர். ஆதவன் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைப் பூர்வீக ஊராகக் கொண்டவர். அவர் தாத்தா காலத்திலேயே புதுடில்லிக்குப் பணிநிமித்தம் சென்று விட்டார்கள். அவருடைய தந்தை டில்லியிலேயே வசித்தார். அம்மா தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதவனின் அப்பாவுக்குக் கல்லிடைக்குறிச்சிமீது தனி அபிமானம் இருந்தது. அந்தப் பற்றுதல் ஆதவனுக்கும் இருந்தது. திருநெல்வேலி வட்டார மனிதர்கள். விஷயங்கள் பற்றி நான் எழுதியவற்றை அவர் மிகுதியும் ரசித்தார். புத்தகங்கள். எழுத்தாளர்கள் மற்றும் பல விஷயங்கள் பற்றியும் நான் எழுதுவதைப் படித்து மகிழ்ந்தார். 'எனக்கு வருகிற கடிதங்களை எல்லாம். படித்து, பதில் எழுதியவுடன் நான் கிழித்துப் போட்டு விடுவேன். ஆனால் உங்கள் கடிதங்களை அப்படிக் கிழித்தெறிய மனம் வருவதில்லை. அவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கிறேன். எப்போது எடுத்துத் திரும்பப் படித்தாலும் அவை மகிழ்ச்சி தருகின்றன என்று ஆதவன் ஒருசமயம் எழுதினார். நல்ல நண்பரான ஆதவன் எதிர்பாராத விதத்தில் திடீர் மரணம் அடைய நேரிட்டது. கர்நாடகாவில் ஒரு புண்ணிய ஸ்தலத்துக்குப் பலரோடு சென்ற அவர் அங்குள்ள பெரிய நதியில் குளிப்பதற்காக இறங்கினார். அவர் இறங்கிய இடத்தில் நீரினுள் ஆபத்தான சுழல் இருந்திருக்கிறது. அச்சுழியில் சிக்கிய ஆதவன் ஆற்றின் வேக இழுப்பில் ஆழ்ந்து மரணம் அடைந்தார். இவற்றை எல்லாம் நான் நண்பர் நாகரத்தினத்திடம் கூறினேன். ஆதவன் சேர்த்து வைத்த கடிதங்கள் எல்லாம் என்ன ஆகியிருக்குமோ தெரியாது. இப்படி எதிர்பாராதவை பல நிகழ்ந்திருக்கும். பலர் சேர்த்து வைத்திருக்க மாட்டார்கள் என்று சொன்னேன்.