பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24? வாழ்க்கைச் சுவடுகள் ஒட்டி இலக்கியப் பேரரங்கு கூட்டியது. அதில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளர் பொன்னீலன், தாமரை ஆசிரியர் சி. மகேந்திரன் ஆகியோருடன் நானும் வரவேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் விரும்பி அழைத்தார்கள். சங்கத்தின் செயலாளர் என். சோமகாந்தன் நேரில் வந்து கூப்பிட்டார். அவருடன் நண்பர் செ. யோகநாதனும் வந்தாா. - நான் என் மறுப்புகளைக் கூறினேன். அவர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. கண்டிப்பாக இலக்கியப் பேரரங்கிற்கு வந்தே ஆகவேண்டும் என்று நண்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள். நான் பாஸ்போர்ட் வாங்குவது சிரமம், விசா வேறு பெற வேண்டும், அதெல்லாம் தொல்லைகள் என்றேன். அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். நானே பாஸ்டோர்ட் பெற்றுத் தருகிறேன் என்று யோகநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்புறமென்ன, நீங்கள் இலங்கை வருகிறீர்கள் எங்கள் விழாவில் கலந்து கொள்கிறீர்கள் எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி என்று நண்பர் சோமகாந்தன் மனநிறைவோடு சொல்லிச் சென்றார். இடையில் நாட்கள் குறைவாகவே இருந்தன. பொறுப்பு ஏற்றுக்கொண்ட நண்பர் யோகநாதன் எனக்குப் பாஸ்போர்ட் வாங்குவதற்காக மிகவும் சிரமங்கள் மேற்கொண்டார். தினசரி ஆட்டோவில் அலைந்து திரிந்து, யார் யாரை எல்லாமோ பார்த்துப் பெரிதும் முயன்றார். இதற்காக அவர் தமது காலம், பணம், உழைப்பு அனைத்தையும் முழுமையாக ஈடுபடுத்தி வெகுவாகச் சிரமப்பட்டார். அப்படியும், ஒருநாள் தாமதமாகத்தான் பாஸ்போர்ட்டும், விசாவும் கிடைத்தன. ஜூலை 5ஆம் தேதி விழாத் துவக்க நாளன்று நானும் பொன்னீலனும் இலங்கை போய்ச் சேர இயலாது போயிற்று. மகேந்திரன் மட்டும் முன்னதாகவே போக வசதிப்பட்டது. அவர் இலக்கியப் பேரரங்கின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டார். பொன்னீலனும் நானும் 6ஆம் தேதி காலையில் விமானத்தில் பயணம் செய்து கொழும்பு நகரை அடைந்தோம். பயண நேரம் ஒரு மணி தான். விமான நிலையத்திலிருந்து எங்களைக் காரில் நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். - இலக்கியப் பேரரங்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நாள் துவக்கவிழாவில் வரவேற்பு உரை, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நான்கு தசாப்தங்கள் பற்றிய அறிமுகவுரை, வாழ்த்துரைகள், புதுமை இலக்கியம் மலர் வெளியீடு, கருத்துரைகள் முதலியன நிகழ்ந்தன.