பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வாழ்க்கைச் சுவடுகள் பன்னிரண்டு நாட்கள், ஆர்வமும் உற்சாகமும் கொண்டிருந்த இலக்கிய நண்பர்களையும், இலக்கிய தாகம் மிகப் பெற்றிருந்த இளைஞர்களையும் கண்டு பேசிப்பழக முடிந்ததே. அது நல்வாய்ப்பு அவர்களுடைய அன்பையும் உபசரிப்பையும் அளவிலாது பெறமுடிந்தது ஒரு நற்பேறு என்ற மனநிறைவு எங்களுக்கு ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்குப் போகவே முடியாது என்ற நிலை. அங்கு நீடித்த யுத்த நிலைமையும் இராணுவக்கெடுபிடிகளும் மிக அதிகம் என்று அறிவித்தார்கள். கொழும்புவில் கூட இராணுவக் கொடுபிடி அதிகம்தான். ரோடில் போகிறவர்கள் எந்த நேரத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனால் அங்கு வசிப்பவர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்பவும் உடன் வைத்திருக்க வேண்டும். அயல் நாட்டுப் பயணிகள் தமது பாஸ்போர்ட்டைச் சதா தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். இரவுகளில் எந்த வேளையிலும் மிலிடரி வந்து வீட்டுக் கதவைத் தட்டி, உட்புகுந்து அறை அறையாகச் சோதனை செய்வது நடைபெறுகிறது. பயணிகள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் கூட இராணுவத்தினர் நள்ளிரவுக்கு மேல் புகுந்து, துப்பாக்கியை நீட்டிக் கொண்டு விசாரணையில் முனைவது அறைகளில் தங்கியிருப்பவர்களின் அமைதியைக் குலைத்து அச்சத்தை ஏற்படுத்துவது சகஜமாக நிகழ்கிறது. இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் எல்லா ரோடுகளிலும் போய்வரக் கூடாது குறிப்பிட்ட சில ரோடுகள் வழியாகத்தான் போய்வர வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அப்பவும் எந்த இடத்திலும் மிலிட்டரி தடை செய்யக்கூடும். ஆகவே, அழகும் வளமும் நிறைந்த கொழும்பு நகரிலும் இலங்கையிலும் தற்காலத்தில் அமைதியான வாழ்வு இல்லை. ஒருவித அச்சநிலையிலேயே மக்கள் வாழ நேரிட்டுள்ளது காலம் செய்யும் கோலம்தான்! யாழ்ப்பாணம் பல ஆண்டுகளாக யுத்த பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. அங்குள்ள நகரங்கள் தாக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விடுத்துத் தப்பி ஓடிக் காடுகளில் வசிக்கிறார்கள் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். பலர் கொழும்பு சேர்ந்து அங்கே வசிக்க நேர்ந்துள்ளது. அநேகர் இலங்கையை விட்டு வெளியேறி அகதிகள் என்ற பெயரில் இந்தியாவிலும், இதர பல நாடுகளிலும் தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். உலகம் நெடுகிலும் இலங்கைத் (யாழ்ப்பாணம் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அப்படி வெளியேற வசதியற்றவர்கள் ரோடு ஓரங்களிலும், காட்டுப்புறங்களிலும் தங்கி எப்படியோ உயிர் வாழ்கிறார்கள். அங்கே அரிசி 1996இல் கிலோ 90 ரூபாய் என்று சொல்லப்பட்டது. அதுவும் கிடைப்பதில்லை. மின்சாரம் கிடையாது. மண்நெய் (கெரசினாயில்-மண்எண்ணெய் தான். அதுவும் அநியாய விலை கொடுத்து வாங்க வேண்டும். பணம் கொடுத்தாலும்