பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌48 வாழ்க்கைச் சுவடுகள் இந்த வீட்டுவேட்டையின் போது, நடுத்தர வர்க்கத்தினர் நாகரிக நகரத்தில், வீடு என்ற பெயரால் ஒண்டுக் குடித்தனத்தில் எப்படியெல்லாம் வாழ நேரிட்டுள்ளது என்பதை மீண்டும் கண்டறிய முடிந்தது. வீட்டுச் சொந்தக்காரர்களின் பேராசை மனப்போக்கையும் புரிந்து கொள்வது சாத்தியமாயிற்று. ஒரு பெரிய வீட்டின் சின்னச் சின்ன அறைகளைக் காட்டி, இது தான், குடக்கூலிக்கு உரிய பகுதி போர்ஷன்), வாடகை ரூ.800 என்று கூசாது கேட்பார்கள் வீடுவைத்திருக்கிறவர்கள். எண்ணுறும், ஆயிரமும் மாதவாடகையாகக் கொடுத்தாலும், எலெக்ட்ரிக் விளக்கு எரிக்க தனிக் கட்டணம், முறை வாசல் தெளித்துப் பெருக்க இவ்வளவு என்றெல்லாம் வசூலிக்கிறார்கள். சிலர் முறைவாசல் கூட்டிப் பெருக்குவதற்குத் துடைப்பத்துக்குத் தனியாகப் பணம் தரவேண்டும் என்று கேட்டு வாங்குவதும் சககஜமாக நடக்கிறது. முன்பெல்லாம் குடிவருகிறவர்கள் இரண்டு மாத வாடகைப் பணத்தை முன்பணமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. குடிஇருப்போர் வீட்டைக் காலி செய்ய நேர்ந்தால், வீட்டுக்காரர் முன்பணத்தைத் திருப்பித் தந்துவிடுவார். அல்லது முன்னதாகத் தெரிவித்துவிட்டு வாடகையாக அந்த முன்பணத்தைச் சரிக்கட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், பத்துமாத வாடகையை முன்பணமாகக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அல்லது. வீட்டுக்காரர் கொடுக்கச் சொல்லும் ஒரு பெரும்தொகையை முன்னதாகக் கட்ட வேண்டும். வீட்டைக் காலி பண்ணிப் போகிறபோது வீட்டுக்காரர் அந்தத் தொகையைத் திருப்பித் தந்து விடுவார். சிலர், நீங்களே சரியான ஆளைப் புதிதாகக் குடியிருக்க அமர்த்தி விட்டு அவரிடமிருந்து பணத்தைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுவதும் நடைமுறையில் இருக்கிறது. நாகரிகப் பெருநகரத்தில் பெரிய வீடுகள் வைத்துக் கொண்டு வாடகைக்கு விட்டுப் பணம் பண்ணுவது லாபகரமான ஒரு தொழிலாக வளர்ந்துள்ளது. இடம் பிடித்துத் தர உதவுகிற தரகருக்கும் நல்ல வருமானம்தான். வாடகைக்கு வீடு தேடித் தந்தால், குடிவருவோர் புரோக்கர் கமிஷன் என்று ஒரு மாத வாடகையை முழுசாக அவருக்குக் கொடுத்தாக வேண்டும். வீட்டுக்காரரிடமும் தனியாக அவர் பணம் பெற்றுக் கொள்வார். எனவே, வீட்டுத்தரகு வேலையும் நல்ல தொழிலாக நடந்து வருகிறது நாகரிக நகரங்களில் தரகர், அங்கே வீடு இருக்கு இங்கே வீடு இருக்கு என்று எங்களை அலையவைத்தார். தி.க.சிவசங்கரனும் எங்களோடு அநேக இடங்களுக்கு வந்து பார்த்தார். எதுவும் வீடாகத் தெரியவில்லை எங்களுக்கு வசதியற்ற சில