பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் $3 முக்கிய நகரத்திலும் நாடகங்கள் நடத்தி விட்டு, கடைசியாகத் திருநெல்வேலிக்கு வந்து சேரும். மாதக்கணக்கில் நாடகங்கள் நடித்துக் காட்டப்படும். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் நாடக அபிமானிகள் வந்து குழுமுவர். கன்னையா சொந்தமாக ஜெனரேட்டர் வைத்து, தனக்குத் தேவையான மின்சத்தியைப் பெற்று மின் விளக்கு அலங்காரங்களும் காட்சி அலங்களிப்புகளும் செய்து மக்களின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டுதல்கள் பெற்றார். மேடையில் அற்புதங்களும் மாயாஜாலங்களும் செய்து காட்டுவதில் திறமைசாலியாக இருந்தார் அவர் தசாவதாரம்' நாடகத்தில் வைகுண்டம் சீன் மிகப் பிரசித்தி பெற்றது. கோயில் கதவுகள் போன்று இரண்டு நெடிய பெரிய கதவுகள் காட்சி தரும். அவற்றின் சதுரம் சதுரமான கட்ட அமைப்புகளில், மின்விளக்குகள் பதிக்கப்பட்டிருக்கும். கதவுகள் பொன்வர்ணம் பூசப்பட்டு மினுமினுப்பாக விளங்கும். திடீரென ஒரு வெடி ஓசை எழும். கதவுகளில் உள்ள எண்ணற்ற மணிகள் ஒலி எழுப்பு, விளக்குகள் பிரகாசிக்க, இரு பெரும் கதவுகளும் விரிந்து திறக்க, உள்ளே பாம்பணையில் பள்ளி கொண்ட விஷ்ணு வர்ண விளக்குகளின் பேரொளியில் தகத்தகாயமாகக் காட்சி அளிப்பார் நாடக ரசிகர்களிடையே பக்திப் பரவசம் ஏற்படவே செய்யும். கன்னையா பகவத் கீதை' நாடகத்தை மேடை ஏற்றிய போது மேடை மீது ரதங்களை அணிவகுத்து நிற்கச் செய்தார். எடுப்பான ஒரு ரதத்தில் அர்ஜூனனும் சாரதியாகக் கண்ணனும் வீற்றிருந்து உரையாடுவார்கள். இப்படிப் பெரும் அளவில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார் கன்னையா. அவருக்குப் பின்வந்த நாடகக்கலைஞர்களும் அவ் உத்திகளைத் தங்களால் இயன்ற அளவுக்குக் கையாள்வதும் நடைமுறை ஆயிற்று. பாளையங்கோட்டைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு முறை சர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போடும். 1930 களில் டேவாள் சர்க்கஸ்' 'ஒயிட்வே சர்க்கஸ் என்று இரண்டு கம்பெனிகள் வெவ்வேறு வருடங்களில் வந்தன. அதிகமான மிருகங்களைக் கொண்டிருந்தன. அவை சிறந்த முறையில் வித்தைகள் காட்டிப் பெயர் பெற்றன. கால ஓட்டத்தில் அவை தாக்குப் பிடிக்க முடியாமல் கலைந்து போயின. பஸ் போக்குவரத்து, நகரங்களுக்கிடையே மட்டும் தான் நிகழ்ந்து வந்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு இடையே இரண்டே இரண்டு பஸ்கள் தான் போய் வந்துகொண்டிருந்தன அந்நாட்களில், விமானப் போக்குவரத்து நாட்டிலேயே மிக அபூர்வமாகத்தான் இருந்தது. தெற்கத்தி ஊர்களில் வானத்தில் விமானம் பறந்து போவதைக்