பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼5● --- வாழ்க்கைச் சுவடுகள் அண்ணா, எபிஷியன்ட் பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம் இருந்தது. மேற்கொண்டு தேவைப்பட்ட தொகையைக் கடனாகப் பெற்று வீடு வாங்கப்பட்டது. பத்தாம் எண் ஃபிளாட் சுவர்கள் சிமிண்ட் பூசப்படாமலும், தரை மெருகுபடுத்தி மொசெய்க் செய்யப்படாமலும், மற்றும் பல வேலைகள் பூர்த்திபெறாமலும், ஒரு வீட்டின் எலும்புக்கூடு போல் இருந்தது. பணம் பெற்றதும் கட்டிடம் கட்டும் நிறுவனத்தார் அவசரமாகப் பணிகள் புரிந்து அதை வசிப்பதற்கு உரிய இடமாக உருவாக்கித் தந்தார்கள். 1988 ஜனவரி கடைசி வாரத்தில். ஜனவரி 31ஆம் தேதி நாங்கள் பாரதி சாலை வீட்டைக் காலி செய்துவிட்டு, வள்ளலார் குடியிருப்பு பத்தாவது எண் வீட்டில் குடிபுகுந்தோம். லாயிட்ஸ் ரோடில் நெருக்கடியும் அசுத்தமும் மலிந்த பகுதியைக் கடந்து, புதுத்தெரு என்கிற நெருக்கடிப் பிரதேசத்தில் நடந்து உள்ளே புகுந்துவிட்டால், வள்ளலார் குடியிருப்பு வளாகம் அமைதியும் அழகும் நிறைந்த பகுதியாகக் காட்சி தரும். அடுக்குக் கட்டிடம் என்று பெயர் பெற்றிருந்தாலும், இதர ஃபிளாட்டுகள், அப்பார்ட்மெண்டுகள் மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் கொண்டதல்ல இந்த இடம் தரைப் பகுதி வீடுகள், அதற்கு மேல் ஒரே ஒரு வரிசைக் கட்டிடங்கள் தான். மூன்று தரமான அறுபத்தெட்டுக் குடியிருப்புப் பகுதிகளை (ஏடைப் பி டைப், சி டைம் கொண்ட வளாகம். பத்தாவது எண் வீடு மாடிப் பகுதியாகும். சென்னை நகரில் 1980களில் இருந்தே அடுக்குக் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்துள்ளது. பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிது புதிதாக ஃபிளாட்டுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகின்றன. சின்னச் சின்ன வீதிகளில் கூட அடுக்குக் கட்டிடங்கள் எடுப்பாகத் தோன்றியுள்ளன. அவற்றின் விலை மதிப்பும் - வாடகை விகிதமும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. இந்த வள்ளலார் குடியிருப்புகள் விலைமதிப்பையே சான்றாகக் கூறலாம். நாங்கள் வாங்கிய போது ஒரு ஃபிளாட்டின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் அதற்கு முன்னதாக வாங்கியவர்கள் ஒன்றரை லட்சம் தான் கொடுத்துள்ளனர். 1990களில் ஒரு ஃபிளாட் விலை நான்கு லட்சம் ஆகிவிட்டது பின்னர், சிறிது காலம் குடியிருந்து விட்டு விற்பனை செய்கிறவர்கள் ஆறு லட்சம், ஏழு லட்சம் என்று விலைகூறி விற்றிருக்கிறார்கள். லாயிட்ஸ் ரோடிலும் சுற்றுவட்டாரத்திலும் அநேக அடுக்குக் கட்டிட வளாகங்கள் தோன்றியுள்ளன. 1980களிலேயே அவற்றின் விலைமதிப்பு அதிகமாகவே இருந்தது. இப்போது மேலும் உயர்ந்துள்ளது. மாநகர் நெடுகிலும் இதே நிலைமை தான். .