பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2线蓝 41 என் அண்ணா கோமதிநாயகம் அவருடைய வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையும் அதிகம் கண்டார் என்று சொல்வதற்கில்லை, மற்றவர்கள் சந்தோஷமாக வழவேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே அதிகம் வருத்தின் கொள்கிறவர்கள் இனத்தைச் சேர்ந்தவர் அவர் பிறருக்காக ஏற்றுக்கொண்ட பணிகளைக் கடமை உணர்வோடும் சிரத்தையாகவும் நேர்மையோடும் செய்துமுடிட்டதிலேயே கருத்தாக இருப்பவர் அவருடைய வாழ்க்கையும் அப்படியே அமைந்திருந்தது. ஆரம்பநாளில் இருந்தே பிறருக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தார். போதிய சன்மானம் பெற்றார் என்று சொல்ல முடியாது. முதலில் திருநெல்வேலியில் மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். காலை 8 மணி முதல் இரவு 930 வரை உழைக்க வேண்டியிருந்தது. சம்பளமும் குறைவு தான். பிறகு சினிமா உலகம் பத்திரிகைக்காக அநேக வருடங்கள் தனது உழைப்பையும் காலத்தையும் ஈடுபடுத்தினார். ஏதோ செலவுக்குப் பணம் கிடைத்ததே தவிர, தாராளமாக செலவு பண்ணி சந்தோஷமாக நாளோட்ட வழி இருந்ததில்லை. சினிமா உலகம் நின்று போனதும், அந்த இதழ் அச்சாகி வந்த் அச்சகத்தில் வேலையில் சேர்ந்தார். கடுமையான உழைப்பு, குறைவான சம்பளம் என்ற நிலைமைதான். அப்புறம் தான் எபிஷியன்ட் பப்ளிசிட்டிஸ் என்கிற விளம்பர ஆலோசகர்கள் நிறுவனத்தில் சேர்ந்தார் அவர் வளர்ந்து கொண்டிருந்த அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டார். அவர்கள் நியாயமான ஊதியம் அளித்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அங்கே நாற்பது வருடங்கள், தமது சொந்த முயற்சிக்கு - சொந்தமான அமைப்புக்கு உழைப்பது போல் பணியாற்றினார். அதிக வேலைகள் கடும் உழைப்பு ஒய்வு எடுக்கவே அவர் விரும்புவதில்லை. இரவில் வெகுநேரம் வரை தொழில் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபடுவது உண்டு. அதிகப்படியான வருமானத்துக்காக கவிஞர் திருலோக சீதாராம் அடிக்கடி சொல்வார். நம் போன்றவர்களுக்குச் சருகு அரிப்பதிலேயே நேரமெல்லாம் போய்விடுகிறது. குளிர்காய்வதற்குப் பொழுது கிடைப்பதேயில்லை என்று. அதே நிலைமைதான் அண்ணாவுக்கும். உழைப்பதிலேயே காலம் எல்லாம் கழிந்தது. ஒய்வு எடுப்பதற்கே நேரமில்லாது போயிற்று. அண்ணா ஊருக்கு வந்து அடிக்கடி தன்னைப் பார்ப்பதில்லையே என்று அம்மாவுக்கு எப்போதும் வருத்தம் இருந்தது. தங்கள் வீட்டு