பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 芝53 வைக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்ததில்லை. எங்களுக்குத் திருமணம் வேண்டாம் என்று உறுதியோடு பெண்கள் கூறினார்கள். சென்னையில் குடும்பத்தினர் வசிப்பதற்கு ஏற்ற இடம் ஒன்றைச் சொந்தமாக்க முடிந்ததே என்ற மனநிறைவு அவருக்கு இருந்தது. அண்ணியும் நற்பண்புகள் கொண்ட நல்ல குடும்பத் தலைவியாகவே விளங்கினார். பலரைப்போல, அது வேண்டும், இது வேண்டும் என்று தேவைகளை அடுக்கித் தொல்லை தரவில்லை. அன்போடும் அமைதியோடும் குடும்பப் பொறுப்புகளைத் தாங்கினார். வீட்டுக்கு வருகிறவர்களைப் பரிவுடன் விசாரித்து அன்போடு உபசரிக்கும் நற்குணம் பெற்றவர் அவர் கணவரின் செயல்களுக்கு எப்போதும் ஆதரவாகவேயிருந்தார். தம்பி ஒருவன், சம்பாதிக்காமல், உருப்படியாக வேலை எதுவும் செய்யாமல், எப்போதும் புத்தகத்தைக் கட்டி மாரடித்துக்கொண்டு. பணவரவுக்கு வகை செய்யாத எழுத்து வேலைகளில் ஈடுபட்டு, குடும்பத்துக்குச் சுமையாக இருக்கிறானே என்று கருதாமலும், எதிர்ப்புத் தெரிவிக்காமலும், ஆரம்பம் முதலே பரிவு நிறைந்த உள்ளத்தோடு நடந்து கொண்டதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். 42 எழுத்தாளன் வாழ்வில் எனக்கு எப்போதும் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று சொல்வதற்கில்லை. சில சந்தர்ப்பங்களின் கிடைத்தது. பெரும்பாலும் பண வரவு இல்லாத நிலைதான் நான் சுதந்திர எழுத்தாளனாகவே வாழ்வது என்ற உறுதி பூண்ட நாளில் இருந்தே இதே நிலைமைதான். அதற்காக நான் கவலையோ வருத்தமோ கொண்டதில்லை. 1960கள் வரை எழுத்து மூலம் எனக்குப் போதுமான பணம் வந்து கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். தமிழ் நாட்டின் பல பத்திரிகைகளும் எனது கதைகளை வெளியிட்டுச் சன்மானமும் அளித்தன. இலங்கையில் வீரகேசரி, தினகரன் நாளிதழ்களும் என் எழுத்துக்களைப் பிரசுரித்துப் பணமும் தந்தன. சிங்கப்பூர் தமிழ் முரசுப் பத்திரிகை தொடர்ந்து என் கதைகள் கட்டுரைகளை வெளியிட்டு உதவியது. 1970களிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கை, மலேசியப் பத்திரிகைகள் அந்த அந்த நாடுகளின் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத்தான் வெளியிட வேண்டும் தமிழ் நாட்டில் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாங்கி வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிற மண்ணின் மைந்தர்கள் உரிமைக் குரலுக்குச் செவிசாய்க்க நேரிட்டது. அதனால் எனது எழுத்துக்களை அவை கேட்டுப்பெறுவதை நிறுத்திக் கொண்டன.