பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£32 வாழ்க்கைச் சுவடுகள் அண்ணாச்சி மகள், கணவன் மற்றும் மகன்களோடு கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசித்துவந்தாள் வருடத்தில் இரண்டு மூன்று முறை திருநெல்வேலி மாவட்டம் வந்து உறவினர்கள் வீடுகளுக்குப் போய்விட்டு, ராஜவல்லிபுரம் போவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் முத்தம்மாளுக்குத் தாராளமாகப் பணம் கொடுத்து உதவினாள். மகளுக்கு ராஜவல்லிபுரம் வீட்டையும் விற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் சில வருடங்களாகவே ஏற்பட்டிருந்தது. நான்தான் மறுத்து வந்தேன். நான் உயிரோடு இருக்கிறவரை இந்த வீடு நம்முடையதாகவே இருக்கட்டுமே என்று சொல்லி வந்தேன். காலப்போக்கில் அந்த வீடு எனக்கு இதம் தரும் இடம் எனும் தன்மையையே இழந்துவிட்டதால்-இழக்கும்படி மனிதர்கள் ஆக்கிவிட்டதால் ராஜவல்லிபுரம் வீட்டின் மீது எனக்கிருந்த பிடிப்பு விடுபட்டுப் போயிற்று. நான் திருநெல்வேலிக்குப் போனாலும், திக சிவசங்கரன் வீட்டில் தங்கினேன். அங்கிருந்து ஒரு நாள் ராஜவல்லிபுரம் போய் வீட்டையும் ஆற்றையும் பார்த்துவிட்டு ஓர் இரவு மட்டும் அங்குத் தங்கிவிட்டு வரவே மனம் இடம் தந்தது. எனவே, வீட்டை விற்றுவிடலாம். வேண்டிய எற்பாடுகளைச் செய்துகொள் என்று மகளிடம் சொல்லிவிட்டேன். அவள் முயன்று. பேசி முடித்து, வீட்டைத் தொண்ணுறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தாள் 1998இல் பணம் மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டது. முத்தம்மாளுக்கு அன்பளிப்பாக இரண்டாயிரம் ரூபாய் அளித்தோம். அந்த வீட்டின் சாவியை வீடு வாங்கியவரிடம் கொடுத்தபோதே எனக்கு அந்த வீட்டுடன் மட்டுமல்ல, அந்த ஊருடனேயே இருந்த தொடர்பும் பற்றுதலும் முடிந்துவிட்டன எனும் உணர்வே மனசில் எழுந்தது. அதன் பிறகு நான் திருநெல்வேலி போக நேர்ந்த போதெல்லாம், ராஜவல்லிபுரம் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டாலும், அங்கே போக உந்துதல் எழவேயில்லை. ராஜவல்லிபுரத்துக்கு நான் அந்நியமாகிப் போனேன். சுதந்திரமாய்ப் போய் உரிமையுடன் வீட்டைத் திறந்து, பையை வைத்துவிட்டு, சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்கப் போட்டுவிட்டு ஹாயாக ஆற்றுக்குப் போகிற ஒரு தன்மை எனக்கு இல்லாமல் போய்விட்டது என்றொரு உணர்வே என்னுள் நிலவுகிறது. வீடு விற்பனை செய்வதற்கு முன்னர், வீட்டில் இருந்த பெரிய பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களை எல்லாம் பெரிய அண்ணாச்சி மகள் சண்முகவடிவும், அண்ணா அசோகனின் பெரிய மகள் சண்முகவடிவும் வண்டியில் ஏற்றி திருநெல்வேலிக்கு எடுத்துப் போய், பாத்திரக்கடையில்