பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 வாழ்க்கைச் சுவடுகள் திருநெல்வேலி பூரீதர் ஸ்டேட் பேங்கில் பணிபுரிகிறார். நல்ல இலக்கிய ரசிகர். படிப்பதில் மிகு ஆர்வம் கொண்டவர். சளைக்காமல் புத்தகங்கள் பத்திரிகைகள் வாங்கிப் படித்து, அவற்றைப் பாதுகாக்கும் இயல்பினர். அவர் வீடு நிறையப் புத்தகக் கட்டுகளே இருக்கின்றன. அவற்றோடு எனது புத்தகங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்வதாக அவர் உறுதி அளித்தார். வீட்டின் சாவியைப் புதிய சொந்தக்காரருக்கு நாங்கள் அளிக்கிற நாளில் நண்பர் பூரீதரும் ராஜவல்லிபுரம் வந்தார். புத்தகங்களைக் கட்டுகள் கட்டுகளாகக் கட்டி. கோணிப்பைகளில் அடைத்து மூட்டைகளாக்கி அவற்றை ஓர் ஆட்டோவில் வைத்துத் திருநெல்வேலியில் அவருடைய வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார். மற்றொரு முறை சென்று வீட்டில் சுவர்களிலிருந்து கழற்றி வைத்திருந்த படங்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்தார். 1998 முடிய, நான் திருநெல்வேலி செல்கையில் தி.க.சி, வீட்டில் தங்கினேன். அன்புச் சகோதரர் தி.க.சிவசங்கரனும் அவர் மனைவியும், நான் எத்தனை நாட்கள் தங்கினாலும், மனம் கோணாமல் பரிவுடன் உபசரித்து மகிழ்ந்தார்கள். பின்னர் திக.சிக்கு நீடித்திருக்கும் நோய்கள் காரணமாகவும். அவர் மனைவிக்கு உள்ள நோய்களின் பாதிப்பால் ஏற்படும் பலவீனங்களினாலும், அதிகமாக வேலைகள் செய்ய முடியாத நிலை உண்டாயிற்று. அதனால் நண்பரே என்னை ரீதர் வீட்டில் தங்கும்படி ஆவனசெய்தார். பூரீதரும் விரும்பி அழைத்து அன்புடன் உபசரித்தார். அவர் வீடு சகல வசதிகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது எவ்விதமான தொந்தரவும் இல்லாது தனித்திருப்பதற்கு ஏற்ற அமைதியான இடம் படிப்பதற்கு படித்தாக வேண்டிய - புதிய புதிய புத்தகங்களும் மிகுதியாக இருக்கின்றன. அவருடைய அம்மாவும் தங்கையும் படிப்பதில் பிரியம் உடையவர்கள். பரிவும் அன்பும் காட்டி இனிது உபசரிக்கும் பண்பினர். அவர்கள் வீட்டில் நான் அந்நியன் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவதில்லை. 1999லும் அதற்குப் பின்னரும் நான் திருநெல்வேலி போன போதெல்லாம் பூரீதர் வீட்டில்தான் தங்கினேன். ஏகப்பட்ட புத்தகங்கள் படித்து மகிழ்வதற்கான வாய்ப்பு அதிகம் கிட்டியது. பூரீதர் பயணங்கள் போவதிலும் ஆர்வம் உடையவர். ஆண்டுதோறும் எங்காவது நீண்ட தூரம் பயணம் போய் வருவது அவருடைய இயல்புகளில் ஒன்றாகும். 2000இல் அவர் இமயம் சேர்ந்து கைலாசம் - மானசரோவர் யாத்திரை முடித்துத் திரும்பினார். அங்குத் தான்கண்ட அழகான காட்சிகள் அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து வந்திருந்தார். திறமையாக எடுக்கப்பட்ட பல நூறு படங்கள். மனேரம்மியமான மலைக்காட்சிகள் அவை,