பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 乏73 விஷமத்தனங்களும் உரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. போதிய கவனிப்பைப் பெறவில்லை என்றே தோன்றுகிறது. 46 தமிழ்நாட்டில் தமிழ் மொழியின்நிலை மகிழ்ச்சி தருவதாயில்லை. தாய் மொழியாகிய தமிழ் கல்விப் பயிற்சிமொழியாக இல்லை ஆட்சி மொழியாக நீதிமன்ற மொழியாக ஆலயங்களில் வழிபாட்டு மொழியாகவும் தமிழ் இல்லை. அனைத்திலும் மேலாக நாட்டு மக்கள் அனைவரும் போற்றி வழங்கும் நிலையிலும் அது இல்லை. இது மிகவும் வேதனை தரும் விஷயம் ஆகும் மக்களில் பெரும்பாலோர் கல்வி அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். கல்வி கற்கிறவர்கள் எல்லோருமே அறிவு வளர்ச்சிக்காவும் இலக்கிய வளங்களைத் தெரிந்து மகிழ்வதற்காகவும் படிக்கிறார்கள் என்பதில்லை. பெரும்பாலோர் நல்லவேலை கிடைத்து வருங்காலத்தை வளம் உள்ளதாக ஆக்கவேண்டும் என்பதற்காகவே கல்விச் சாலைகளில் சேர்ந்து படிக்கிறார்கள். பெரும்படிப்புப் படித்திருந்தால் பணமும் நகைகளும் இதர பல பொருள்களும் தரக்கூடிய நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொள்ளமுடியும் என்ற எதிர்பார்ப்புடன் எத்தனையோபேர் உயர்படிப்புப் படிக்கிறார்கள். படிக்கிற காலத்திலேயே தமிழின் செல்வங்களான பழங்கால இலக்கியங்களையும் தமிழ்மொழிக்குப் புதிய வனப்பும் வலிமையும் சேர்க்கும் தற்கால இலக்கியங்களையும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர்கள் மிகமிகக் குறைவு. மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசிரியர்களில்கூடப் பெரும்பாலர் இன்றைய இலக்கியங்களிலும் புதுமைப் படைப்புகளிலும் நாட்டம் கொள்வதில்லை. படித்து முடித்துப் பட்டம் பெற்றுவிட்ட பிறகு பெரும்பாலும் இளைஞர்கள் நல்ல உத்தியோகம் தேடுவதில் கருத்தாக இருக்கிறார்கள். வேலை கிடைத்ததும், உல்லாசமாக வாழ்வதில் உற்சாகம் கொள்கிறார்களே தவிர, தற்கால எழுத்துக்கள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபடுவோர் வெகு சிலரேயாவர். இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளில் தங்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் செலுத்துவதில்தான் அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். புத்தகங்கள்- அதிலும் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொள்வதில்லை. அப்படி அக்கறை காட்டுகிறவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள். அவர்களிலும் ஒருசிலர்தான் ஆழ்ந்த இலக்கியங்களில் சிந்தனைக்கனமும் புதுமைப்பொலிவும் கொண்ட