பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?@ வாழ்க்கைச் சுவடுகள் வாழ்க்கையின் யதார்த்த நிலைமையைத்தான் நா.பா. கூறினார். தற்காலத்தில், எழுத்தாளராகவேண்டும் என்று ஆசைப்படுகிற இளைஞர்களில் அநேகர் கவிதை என்று நாலைந்து வரிகள் எழுதுவதில் மட்டுமே திருப்தி அடைகிறார்கள். கவிதை என்றால், உரைநடை போல் அதிகமாக எழுதிக் கஷ்டப்பட வேண்டாம் என்ற எண்ணம் பலருக்கு அதிலும் காலஓட்டத்தில் ஹைக்கூ என்று மூன்று வரிகள் மட்டும் எழுதினாலே போதும் கவிஞராகி விடலாம் என்ற நினைப்பு எண்ணற்ற இளைஞர்களுக்கு ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. அவர்கள் மூன்று வரி ஹைக்கூ தவிர வேறு எதுவும் எழுத ஆசைப்படுவதில்லை. * கவிதைகள் எழுதி, அவற்றில் சில ஏதாவது பத்திரிகையில் வந்தால் போதும்; அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்று எழுதிக்கொள்கிறார்கள். அவர்களது அடுத்த குறிக்கோள் சினிமாவுக்குப் பாட்டு எழுதுவதுதான். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சில கதைகள் எழுதி எழுத்தாளர் ஆகிவிடுகிற இளைஞர்கள் சினிமாக் கதாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அலைகிறார்கள். சினிமா வாய்ப்புக் கிடைத்துவிட்டால் பெயர். புகழ் வெளிச்சம், மிகுபணம், சுகபோக வாழ்க்கை வசதிகள் எல்லாம் வந்து சேரும் என்ற நினைப்பு இளைஞர்கள் பலரது வாழ்வை வீணடித்துவிடுகிறது. எந்தத் துறையிலும் எவரும் சிரமங்கள் அனுபவிக்காமல் முன்னேறிவிட இயலாது என்ற உண்மையை இளைஞர்கள் மனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் முதலில், 47 நான் எழுதிக்கொண்டே இருந்தேன். வாசகர் பரப்பு அதிகமாக உள்ள வாரப் பத்திரிகைகளின் என் எழுத்துக்கள் வராத போதிலும் சிற்றிதழ்களில் எனது கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. 'தீபம்' மாத இதழில் கட்டுரைத் தொடர்களை - வரலாற்றுப் பதிவுகளை வரிசையாக எழுதி வந்ததால் நான் சிறுகதை எழுதக்கூடியவன் என்பதே மறக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. எனது எழுத்தை விரும்பிக் கேட்கும் விசேஷ வெளியீடுகளும் கட்டுரை எழுதித் தரும்படியே கேட்டன. ஆயினும், 'தினமலர் ஆண்டுதோறும் தனது தீபாவளி மலருக்கு என்னிடம் சிறுகதையே கேட்டு வாங்கிப் பிரசுரித்தது. 1990களில் எனது சிறுகதைத் தொகுப்புகள் பல வெளிவந்தன. என்னுடைய எழுபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி, நண்பர் டாக்டர்