பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாழ்க்கைச் சுவடுகள் இவ்விதம் காலம் நிகழ்த்தியுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய நாவல் எழுத வேண்டும் என்று விரும்பினேன். ஒன்றின் பெயர் அடிவானம் மற்றது காலவேகம். இரண்டில் ஒன்றைக் கூட இதுவரை நான் எழுதிவிடவில்லை. காலம் ஒடுகிறது. முதுமை என்னை ஆட்கொள்கிறது. இவ்வளவு காலமாக எழுதாததையா இனிமேல் எழுதிவிட முடியும் என்று மனம் சிரிக்கிறது. இதுவரை ஏன் எழுதவில்லை? நான் எழுதி எழுதி வைத்த பலவும் அச்சில் வர வழியோ வசதியோ இல்லாத நிலையே நீடித்தது. அச்சில் வந்த அளவற்ற விஷயங்கள் நூல் வடிவம் பெறக்கூடிய வாய்ப்புகள் கிட்டவேயில்லை. இந்த நிலையில் மேலும் மேலும் எழுதி வைத்துத்தான் என்ன பிரயோசனம் என்ற எண்ணமே அவற்றை எழுதாமல் இருந்துவிட்டதற்குக் காரணம் ஆகும். 1950கள் 60களில், என் எழுத்துக்களை நானே புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று எண்ணினேன். அப்போது சில ஆயிரங்கள் பணம் கிடைத்திருந்தால் அம் முயற்சியில் ஈடுபட்டு, வருமானத்தை ஈடுபடுத்தித் தொழிலை வளர்த்திருக்க முடியும். ஆனால் அன்று ஐயாயிரம் ரூபாய் கிடைக்க வழி இல்லாது போயிற்று. - 1990களில் பல ஆயிரங்கள் கிடைத்தன. 2000த்தில் இருபத்தையாயிரம், பத்தாயிரம் என்று வள்ளல்கள் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், எண்பது வயது முடிந்துவிட்ட முதுமைக்காலத்தில, புத்தகங்கள் உருவாக்கும் முயற்சியில் முனைவது சாத்தியமாக இல்லை எனக்கு. இதுதான் வாழ்க்கையின் விபரீத முரண்-ஐரனி ஆஃப் லைஃப் என்று சிரிக்கிறது என் மனம் 49 எனக்கு 80 வயது நிறைந்து விட்டது. இன்றும் நான் எழுதவும் படிக்கவும் தெடுத்துரம் நடக்கவும் சக்தி உள்ளவனாக இருக்கிறேன். எண்பது வயதுக்குட்பட்ட சில நண்பர்கள். எங்களால் நடக்க முடியவில்லை, அதிகம் படிக்க இயலவில்லை, பலவித நோய்களின் பாதிப்புகள் தொல்லை தருகின்றன, எழுதமுடியாதவாறு கையில்-விரல்களில் சதா வலி இருக்கிறது. மருந்துகள் சாப்பிடுகிறோம் என்று தெரிவிக்கிறார்கள். நான் ஆரோக்கியமாக உழைக்கக்கூடிய வலுவுடன் இருப்பதற்காக "லைஃப் ஃபோர்ஸ்' எனப்படுகிற ஜீவசக்திக்கு உயிராற்றலுக்கு நன்றி கூறவேண்டும்.